மகாலட்சுமியின் அம்சம் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். மகாலட்சுமி வம்சத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் செய்ய வேண்டிய ஒரு சிறிய பரிகாரத்தினால் வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் தீர்ந்து போகும் அந்த பரிகாரத்தை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு மக்காச்சோளம் தேவைப்படும் ஒரு மஞ்சள் நிற துணியும் தேவைப்படும். துணிகள் மக்காச்சோளத்தை வைத்து நன்றாக கட்டி வீட்டின் கிழக்கு மூலையில் ஒரு ஆணியில் மாட்டி வைக்க வேண்டும் இல்லை என்றால் தென்கிழக்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும். அக்கா சூளத்தை உதிர்த்து தான் அந்த மஞ்சள் நிற துணியில் வைத்து கட்ட வேண்டும் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் முறை

தினமும் நம் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும்போது தென்கிழக்கு மூலையில் உள்ள அந்த மக்காச்சோளம் முடிச்சுக்கும் ஊதுபத்தி காட்ட வேண்டும் ஆறு மாதத்திற்கு பிறகு அந்த முடிச்சில் உள்ள சோளத்தை எடுத்து காகம் மற்றும் குருவிகளுக்கு இரையாக போட்டு விடலாம் மறுபடியும் புதிய சோளத்தை வைத்து கட்ட வேண்டும்.
பணவரவை அதிகரித்து கொடுக்கும் மக்காச்சோளம்
தொடர்ந்து தென்கிழக்கு மூலையில் மக்காச்சோளம் இருந்து கொண்டே இருந்தால் வீட்டில் பணக்கஷ்டம் வராது என்பது ஐதீகம் இதை நீங்கள் பணம் கஷ்டம் தீரும் வரையில் வைக்கலாம் கடன் தொல்லையில் இருந்து வெளியே வந்து பிறகும் கூட உங்களுடைய மனநிறைவுக்காக இந்த பரிகாரத்தை செய்து கொண்டே இருக்கலாம் பூச்சி அரித்த சோளத்தை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. எனவே ஆறு மாதத்திற்கு ஒருமுறை புதிதான சோளத்தை வாங்க வேண்டும். நம்பிக்கையோடு மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கொடுத்த பணம் திரும்ப கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்!



