Advertisement
ஆன்மிகம்

இந்த ஜென்மத்தில் பண கஷ்டமே உங்களுக்கு வராது இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்!

Advertisement

இன்றைய உலகில், பணம் இல்லாத வாழ்க்கையை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. இது நமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், நமது சவாலான காலங்களிலும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவரும் நமது நிதி சம்பந்தமாக ஒருவித உத்தரவாதத்தை விரும்புகிறோம். ஆனால் சரியான வாஸ்து வழிகாட்டுதலின் உதவியுடன், ஒருவர் தங்கள் வாழ்க்கையை நிதி ஸ்திரத்தன்மையுடன் வாழ முடியும். வாஸ்து, நேர்மறை ஆற்றல் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை ஒரு வீட்டிற்கு ஈர்த்து கொடுக்கிறது. அதிர்ஷ்டத்திற்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகளை ஏற்படுத்தும்.

மக்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் அடிப்படை சிக்கலாக இருக்கக்கூடியது பணம்தான். பொருளாதார ரீதியில் ஒருவரின் வளர்ச்சியை வைத்தே, மனிதனின் வளர்ச்சியானது தற்போது கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் ஒன்றாக இருந்தால் பணக்கஷ்டம் வராது என ஆன்மீகம் கூறுகிறது. உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த ஐந்து பொருட்கள் என்ன என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

யானை சிலை

ஒவ்வொருவருமே வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை தவறாமல் பின்பற்றுவோம். வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் யானை சிலை. இந்த யானை சிலை எந்த நிறத்திலும்‌‌ இருக்கலாம். வெள்ளியில் செய்த யானை சிலையாக இருந்தால் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் நல்லது நடக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் ராகு பகவானின் ஏதாவது உக்கிரம் இருந்தால் அது குறைந்து பண பற்றாக்குறை நீங்கும்.

ஏகாஷி தேங்காய்

இந்து மதத்தில் தேங்காய் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. கடவுள் வழிபாட்டிலிருந்து, இறுதி சடங்கு வரை அனைத்திலுமே தேங்காய் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒருவேளை உங்களுக்கு 3 கண் உடைய தேங்காய் கிடைத்தால் அது உங்கள் அதிர்ஷ்டம் ஆகும். இந்த தேங்காய் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த தேங்காய் ஏகாஷி தேங்காய் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேங்காயை கடவுளுக்கு வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை வழங்கும். இந்த தேங்காய் லக்ஷ்மி தேவியின் அவதாரம் என்று நம்பப்படுகிறது.

Advertisement

மஞ்சள் காசு

லட்சுமி தேவியின் அடையாளமாக மஞ்சள் காசு கருதப்படுகிறது. ஒரு ரூபாய் நாணயமோ அல்லது ஐந்து ரூபாய் நாணயமோ ஏதாவது ஒன்றனை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து விடுங்கள். இது மகாலட்சுமி தாயாரின் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. இதனை எப்பொழுதும் உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். இதனால் வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். வருமானம் பெருகும்.

Advertisement

மீன் படங்கள் அல்லது சிலை

மீன் ஆரோக்கியம், வலிமை, செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வெள்ளி அல்லது பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட மீன் சிலையை வீட்டில் வைத்திருப்பது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். இந்த மீன் படத்தை நீங்கள் வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்தால் மிகவும் நல்லது. உலோகத்தால் செய்யப்பட்ட மீனை வைத்திருக்க முடியாவிட்டால், நீங்கள் ஒரு ஜோடி மீன்களின் ஓவியத்தையும் வீட்டில் வைக்கலாம் அல்லது மீன் தொட்டியையும் வைக்கலாம்.

இதனையும் படியுங்கள் : வாஸ்து படி இதை மட்டும் இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

குங்கிலியம்

குங்கிலியம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நேர்மறை ஆற்றலை அதிகம் அதிகரிக்க கூடிய தன்மை உடையது. இதனை நாம் எப்பொழுதும் நம்முடைய பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும். குங்கிலியம் பொடியை தினந்தோறும் வீடு அல்லது தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணியில் சேர்த்து புகை காட்டினால் கெட்ட சக்திகள் விலகி, நல்ல சக்திகள் உருவாகும். இப்படி நாம் வாரத்தில் ஒரு நாள் செய்து வர வேண்டும், இதன் மூலம் நம்முடைய வியாபாரமும் பெருகும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சத்தான அதேசமயம் ருசியான இந்த வாழைப்பூ மடல் சட்னி செய்து பாருங்கள் இதன் சுவை 10 இட்லிக்கும் மேலாக சாப்பிட வைக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 10 ஜூன் 2024!

மேஷம் நாள் முழுவதும் மன நிம்மதியும், உற்சாகமும், தெளிவும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன்…

4 மணி நேரங்கள் ago

இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கு இந்த சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொத்சு இப்படி செய்து பாருங்கள்!!!

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?…

15 மணி நேரங்கள் ago

மண மணக்கும் மட்டன் தண்ணீர் ரசம் இப்படி செய்து பாருங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்!!!

விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட நேரம் கிடைக்கும். அதிலும் நீங்கள் அசைவ பிரியர் என்றால், பல…

20 மணி நேரங்கள் ago

மிகவும் சுவையான கறிவேப்பிலை வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்கள் இரண்டு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

சாப்பாட்டில் அதிகமான சத்துக்களை சேர்த்துக்கணும், சத்துள்ள பொருட்களை சாப்பிடணும் நினைச்சாலும் ஒரு சில உணவுப் பொருட்களை நம் கண்ணுக்கு தெரிந்தே…

1 நாள் ago

மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்!!!

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்று கூறுகின்றனர். பஞ்சாங்கத்திலும் சரி, காலண்டரிலும் சரி மக்கள்…

2 நாட்கள் ago