குடும்பம் செழிக்க பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்!
பொதுவாக பெண்கள் அதிகாலை எழுதினவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கடைபிடிக்க கூடாத விஷயங்கள் என்று இருக்கிறது. அதனது பின் பற்றுவதன் மூலம் அந்த வீடு செழித்து விளங்கும். பொதுவாக பெண்கள் என்று சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஒரு வீட்டின் ஆணிவேர் என்று
பொதுவாக பெண்கள் அதிகாலை எழுதினவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கடைபிடிக்க கூடாத விஷயங்கள் என்று இருக்கிறது. அதனது பின் பற்றுவதன் மூலம் அந்த வீடு செழித்து விளங்கும். பொதுவாக பெண்கள் என்று சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஒரு வீட்டின் ஆணிவேர் என்று கருதப்படும் பெண்கள் காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள அனைத்து பணிகளை செய்து குடுப்பதன் காரணமாக தான். அந்த குடும்பம் நல்ல ஒரு முன்னேற்றத்தின் பாதையில் செல்வதை காணமுடியும்.
பெண்கள் என்றாலே அவர்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை மகிழ்ச்சியாக வழிநடத்த ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். ஒரு வீட்டில் பாரம்பரியமானது அந்த வீட்டிலுள்ள பெண்ணின் பழக்கவழக்கத்தை வைத்து தான் கூறப்படுகிறது. பெண்கள் இல்லாமல் ஒரு வீடானது முழுமை அடையாது. நம் முன்னோர்கள் அனைத்து முக்கியமான பொறுப்புக்களையும் குடும்பத் தலைவியான பெண்கள் இடத்தில்தான் ஒப்படைப்பார்கள். ஆகமொத்தத்தில் நம் வீட்டின் நடமாடும் மஹாலக்ஷ்மியாக போற்றப்படுபவள் பெண் தான். இப்படி பல சிறப்புகளையும் கொண்ட ஒரு பெண்ணானவள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் உள்ளது. இந்தக் கோட்பாடுகளை பெண்கள் வீட்டில் கடைபிடித்து வந்தால் நம் குடும்பமானது சந்தோஷமாகவும், நம் வீடு கோவிலாகவும் மாறிவிடும்.
அதிகாலையில் விளக்கு ஏற்றுதல்
அதிகாலை நேரம் என்று சொல்லக்கூடிய பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் எழுத்தவுடன் காலை கடன்களையெல்லாம் முடித்துவிட்டு. குளித்தவுடன் மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். காலையிலும் மாலையிலும் வீட்டில் உள்ள பூஜை அறையில் இறைவனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது நம் இல்லத்திற்கு மிகவும் நல்லது. பெண்கள் இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் இதனை கடைபிடிக்கும் பொழுது மகாலட்சுமி மனமகிழ்ந்து நமது வீட்டிலேயே தங்கி விடுவாள். அதுமட்டுமல்லாமல் நமது குழந்தைகளும் நமது செயல்களை பார்த்து நாமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்வார்கள்.
ஆடை
காலை எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு நல்ல ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் வீட்டுப் பெண்கள் அணியும் ஆடை என்றால் அதில் இரவில் போடப்படும் நைட்டி தான் முதலில் வந்து நிற்கிறது. கட்டாயம் புடவை தான் அணிந்து கொள்ள வேண்டும் என்பதில் எந்த அவசியமும் இல்லை. ஆனால் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது இந்த ஆடைகளை தவிர்த்துவிட்டு புடவை அணிந்து கொள்வது நல்லது. இதனால் நமது வீட்டில் ஒரு நேர்மறை ஆற்றலை நம்மளால் உணர இயலும்.
குங்குமம் இடுதல்
திருமணமான பெண்களுக்கு குங்குமம் என்றால் மிகவும் மங்களகரமான ஒன்று. அப்படிப்பட்ட குங்குமத்தை தினமும் திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொழுது ஒரு காப்பாக இருந்து அவர்களை காப்பாற்றுகிறது. கணவனுடைய நீண்ட ஆயுளுக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யத்திற்கும் இந்த குங்குமம் வழிவகிக்கிறது. திருமணம் ஆன பெண்கள் என்றால், மூன்று இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும். அதாவது நெற்றியில், முன் வகுடில் மற்றும் திருமாங்கல்யத்தில் திருமணம் வைக்க வேண்டும்.
மாலையில் அடுத்த வீட்டிற்கு செல்ல கூடாது
திருமணமான பெண்கள் மாலையில் வீட்டில் விளக்கி ஏற்றியவுடன் அடுத்த வீட்டிற்கு செல்லக்கூடாது. அதிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி அடுத்த வீட்டில் தங்கக்கூடாது. பொதுவாக மாலை நேரம் என்றால் தேவர்களும் ரிஷிகளும் நம்மளுடைய வேண்டுதலை நிறைவேற்ற வருவார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் திருமணமான பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது.
இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/vilari-manjal-parigaram-in-tamil/
வீட்டில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படவேண்டும். அது அந்த வீட்டிற்கு சர்வ லட்சியத்தையும் கொடுத்துவிடும். ஒரு வீட்டில் எவ்வளவுதான் கஷ்டங்கள் இருந்தாலும் அந்த பிரச்சனைகளை பெண்ணானவள் சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வினை அடைய முயற்சி செய்கின்றாரோ அந்த வீட்டில் கஷ்டம் என்பது நிரந்தரமாக தங்கவே தங்காது.