உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? 3 விரலி மஞ்சள் கையில் இருந்தால் மட்டும் போதும் பண வரவு அதிகரிக்கும்!

- Advertisement -

தொழில் செய்பவராக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி வரும் வருமானம் உயர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இப்படி அனைவருக்கும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் பெரும்பாலானவர்கள் பதிலளிப்பார்கள். கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது. திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து கையில் இருக்கும் பணம் அனைத்தும் செலவாகி விடுகிறது. கையில் பணம் வரவும் மாட்டேன் என்கிறது, அப்படியே வந்தாலும் வரும் பணம் கையில் தங்கவும் மாட்டேன் என்கிறது என புலம்பி, வருத்தப்படுபவர்களே அதிகம்.

-விளம்பரம்-

வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும். அந்த நேர்மறை ஆற்றல்களை நம்மை சுற்றி அதிகரிக்க செய்து, வரும் வருமானத்தை பெருக செய்வதற்கு சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும். பணத்தை பெருக்குவதற்கான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

திடீர் பணவரவு ஏற்பட

இந்த பரிகாரத்தை நீங்கள் எப்போது வீடு துடைத்தாலும் செய்ய வேண்டும். நீங்கள் வீடு துடைக்க எடுத்து வைத்திருக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கலந்த பிறகு அந்த தண்ணீரை கொண்டு வீடு துடைத்து விடுங்கள். இதை வாரம் ஒரு முறை கட்டாயம் செய்வது நல்லது. இதன்மூலம் வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்குவதுடன் மஞ்சள் குரு பகவானுக்குரிய நிறம் இதனால் அங்கு பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. இப்படி நாம் வீடு துடைக்கும் பொழுது செய்த வேலைக்கான சரியான ஊதியம் கிடைக்காமல் இருந்தாலும் உடனே கிடைத்து விடும்.

பண வரவை அதிகரிக்க

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் துளசி இலைகளையும்‌ மற்றும் 11 கிராம்பையும் வைத்து இதை ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அதை உங்கள் உள்ளங்கையில் வைத்து கண் மூடி சிறிது நேரம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றும் உங்களுக்கு தேவையான நேரத்தில் தேவைக்கு பணம் கிடைக்க வேண்டும் என்று மனதார உங்கள் பிரார்த்தனையை மகாலட்சுமி தாயாரிடம் வைத்து விடுங்கள். பிறகு இந்த மூட்டை அரிசி பானையில் யாருக்கும் தெரியாமல் போட்டு வைத்து விடுங்கள். இதை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வந்தால் போதும். இதில் இருக்கும் காய்ந்த துளசியையும், கிராம்பையும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் பண வரவு அதிகரிக்கும். இந்த மூட்டையும் பணத்தை ஈர்க்கும் சக்தியை தரும்.

பணம் அதிகம் சேர

இந்த பரிகாரம் கொஞ்சம் அதிகமான பலன்களை விரைவில் கொடுக்கக் கூடியது. இந்த பரிகாரம் செய்வதற்கு மூன்று விரலி மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிகப்பு நிற துணியை எடுத்து, அதில் மூன்று விரலி மஞ்சள் வைத்த பிறகு கொஞ்சம் கற்கண்டை வைத்து விடுங்கள். இதை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக முடிச்சாக கட்டி ஒரு டப்பாவில் போட்டு மூடி விடுங்கள். இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதனால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு நீங்கள் ஏதாவது ஒரு செயலை தொடங்கவோ அல்லது நல்ல காரியத்திற்கும் பணம் தேவை என்றால் அதற்காக நீங்கள் அலைய வேண்டிய அவசியமும் இருக்காது. உங்களுக்கு தேவையான பணம் எப்படியும் உங்களுக்கு வந்து சேரும். இந்த பரிகாரம் முடிச்சு 48 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயமாக மாற்றி விட வேண்டும். இதில் இருக்கும் மஞ்சளை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள், கற்கண்டை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

-விளம்பரம்-