வீட்டில் சகல செல்வங்களும் மலை போல் சேர தீபாவளி திருநாளில் மறக்காமல் இதை மட்டும் செய்து விடுங்கள் போதும்!

கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன. வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக தீபாவளி திருநாளில் லட்சுமி குபேரரை வணங்கினால் செல்வம் பெருகும். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர

By ·

கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன. வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக தீபாவளி திருநாளில் லட்சுமி குபேரரை வணங்கினால் செல்வம் பெருகும். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். அதனால் கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். செல்வ வளம் பெருக தீபாவளி பண்டிகை நாளில் லட்சுமி குபேரரை நினைத்து வழிபாடு செய்யலாம்.

தீபாவளி என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆனந்தம் தான். நமது தமிழகத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். தீபாவளி என்றால் எண்ணெய் குளியல், கோவிலுக்கு செல்லுதல், வகைவகையான பலகாரங்களை சாப்பிடுதல், பட்டாசுகள் வெடித்தல் மட்டுமல்ல…! வீட்டில் செல்வம் நிலைக்க பூஜை செய்வதும் தான். இந்த பூஜையை செய்ய தீபாவளியே உகந்த நாளாகும். இதை செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். செல்வம் சேர தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும் என இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

எண்ணெய் தேய்த்து குளித்தல்

தீபாவளி அன்று அதிகாலை எழுத்து சாமி கும்பிட்டு தலைக்கு நல்லெணெய் வைத்து குளிப்பது என்பது அனைவரது பழக்கம். அதிகாலை கங்காஸ்நானம் செய்வது மிகவும் புன்னியமானதாக கருதப்படுகிறது. அதுவும் குளிக்கும் நீர் வெது வெதுப்பானதாக இருக்க‌ வேண்டும். இப்படி குளிக்கும் போதும் மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் உங்களை பிடித்த தற்திரியம், பீடை இவை அனைத்தும் நீங்கும்.

கோமதி சக்கரம்

ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. தீபாவளி அன்று கோமதி சக்கரத்தை பூஜை அறையில் வைத்து லட்சுமி தாயாரை நினைத்து பிரார்த்தனை செய்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும் என நம்பப்படுகிறது. கோமதி சக்கரம் வீட்டில் வைத்திருந்தால் நிறைய மாற்றங்கள் வரும். அதாவது செல்வ வளம் பெருகும். நமது வீட்டில் வாஸ்து கோளாறுகள் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அன்ன தானம்

உணவை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதே உன்னதமான தானமாகும் எனவே தான் தானத்திலே சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதனால் தீபாவளி தரு நாளன்று இயலாதவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நம்முடைய ஜென்ம கர்மவினைகள் நீங்கி பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு மற்றும் இல்லாமல் பறவைகள், விலங்குகள் அனைத்திற்கும் உணவளிக்கலாம்.

அசைவம்

பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று அமாவாசை வருவதால் இந்த தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது. இந்த தீபாவளி நன்னாளில், அமாவாசை விரதம், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல் முதலான வழிபாட்டை செய்வது நல்லது.

லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. தீபாவளி அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு மிக்கது. அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் கடன்கள் தீர்ந்து செல்வம் பெருகும்.

இதனையும் படியுங்கள் : அதிர்ஷ்டத்தையும் அளவில்லா பணத்தையும் அள்ளித்தரும் கண்ணாடி பரிகாரம் இப்படி ஒரு முறை செய்து விடுங்கள்!

Recipes AMP · Quick view
View full