பணக்கார யோகம் பெறுவதற்கு செய்ய வேண்டியவை!!

சனியை போல கெடுப்பாறும் இல்லை கொடுப்பாறும் இல்லை. சனி கொடுக்க யார் தடுப்பார் என்று பழமொழியும் கூட உண்டு. சனீஸ்வர பகவானுடைய அருளை முழுவதுமாக நமக்கு விளக்குவதற்காக தான் இந்த பழமொழி உள்ளது. இந்த பழமொழிக்கு ஏற்றவாறுதான் சனி பகவானால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவருடைய அரு

By ·

சனியை போல கெடுப்பாறும் இல்லை கொடுப்பாறும் இல்லை. சனி கொடுக்க யார் தடுப்பார் என்று பழமொழியும் கூட உண்டு. சனீஸ்வர பகவானுடைய அருளை முழுவதுமாக நமக்கு விளக்குவதற்காக தான் இந்த பழமொழி உள்ளது. இந்த பழமொழிக்கு ஏற்றவாறுதான் சனி பகவானால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவருடைய அருள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும். அந்த அளவிற்கு சனீஸ்வர பகவான் சக்தி வாய்ந்த கிரகமாக திகழ்கிறார். பணக்கார யோகத்தை பெறுவதற்கும் சனீஸ்வர பகவானின் அருளை பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

சனீஸ்வர பகவான்

நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் நவகிரகங்களின் ஆதிக்கத்தின் பெயரிலேயே நமக்கு நடக்கிறது அதனால் தான் அனைவரும் சாதகத்தை நம்பி நவகிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் நம்முடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்கிறார்கள். முக்கியமாக சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும். சனீஸ்வர பகவானின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவருடைய வாழ்க்கையில் இதுவரையில் அன்பு வைத்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். சனீஸ்வர பகவானின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் உள்ளன அப்படிப்பட்ட ஒரு வழிமுறைகளில் எளிமையான வழிமுறை தான் இந்த வழிபாட்டு முறை பரம ஏழையாக இருந்தாலும் கூட அவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வாழ்க்கையை பணக்கார யோகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம் செய்யும் முறை

சனிக்கிழமை அன்று தங்களால் முடிந்த அளவிற்கு பச்சரிசியையும் கருப்பு உளுந்தையும் யாருக்காவது ஒருவருக்கு தானமாக கொடுக்க வேண்டும். எந்தவித பிரதிபலனும் இல்லாமல் சனிக்கிழமையில் இந்த தானத்தை செய்தால் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளும் நீங்கும். சனீஸ்வர பகவானின் அருளை முழுமையாக பெற முடியும் சில சமயங்களில் முழுமையாக பெற முடியாவிட்டாலும் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். சனிக்கிழமை தோறும் உங்களால் முடிந்த அளவிற்கு இந்த இரண்டு பொருட்களையும் யாருக்காவது வாங்கி கொடுப்பதன் மூலம் நிச்சயமாக பணக்கார யோகத்தையும் பெறமுடியும் முழு மனதோடு இதனை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : சம்பளம் பணம் வீண் செலவாகமல் இருக்க வேண்டுமா ? பணம் வரவு அதிகரிக்க ஒரு சொம்பு இருந்தா போதும்!

Recipes AMP · Quick view
View full