சமீப காலமாகவே பெரும்பாலான மக்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது இந்த பண பிரச்சனை தான் யாரும் வீட்டில் சும்மா அமர்ந்து கொண்டு பணம் இல்லை, பணம் அதிகமாக தேவைப்படுகிறது என இதுபோன்ற எல்லாம் கூறுவதில்லை. அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் என்னதான் வேலைக்கு சென்று நாலு காசு சம்பாதித்தாலும் அந்த சம்பள பணம் அவர் வேலையை விட்டு வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே செலவாகி விடுகிறது என்பதுதான் இங்கு பலருடைய பிரச்சினையாக இருக்கிறது.
கலச பரிகாரம்
இப்படி சம்பளம் வந்ததுமே பணம் கைவிட்டுப் போகிற பொழுது நம்முடைய கையில் பணப்புழக்கம் என்பது குறைந்து கொண்டே நான் போகிறது இப்படி நம்மிடம் இல்லாத பண பழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், வீண் செலவாகும் பணங்களை தடுப்பதற்காகவும் ஆன்மீக ரீதியாக நாம் இந்த சிறிய கலச பரிகாரத்தை நாம் நாம் நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்கான பலனும் நமக்கு சிறப்பாக கிடைக்கும்.

பரிகாரம் செய்முறை
இந்த பரிகாரத்தை நீங்கள் வேலை பார்க்கும் இடம் தொழில் நடத்தும் இடம் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் மிகவும் எளிமையான பரிகாரம் தான். சரி, வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்வதென்று பார்க்கலாம் இந்த பரிகாரத்தை செய்றதுக்கு நமக்கு இந்த மாதிரி ஒரு சிறிய அளவுல இருக்கிற ஒரு சொம்பு எடுத்துக்கோங்க. இந்த பரிகாரத்துக்கு பயன்படுத்துற சொம்பு பித்தளை சொம்பு, வெள்ளி சொம்பு கூட பயன்படுத்தலாம். ஏன் இதே அளவுல இருக்கிற மண் பாத்திரத்தில் கூட இந்த பரிகாரத்தை நீங்க செய்யலாம்.
சொம்பு எடுத்ததுக்கு அப்புறமா கொஞ்சமா ஓரு பாத்திரத்தில மஞ்சள் குழப்பி அந்த மஞ்சளை சொம்போட அனைத்து பகுதிகளையும் படுற மாதிரி வெளிப்புறமா பூசணும். சொம்போட இந்த கழுத்து பகுதிக்கு மேலே இருந்து கீழே வரைக்கும் ஃபுல்லா மஞ்சள் பூசியதுக்கு அப்புறமாக குங்கும பொட்டு வைக்கணும். நீங்க இப்படி வைக்கக்கூடிய குங்கும பொட்டை ஒற்றைப்படையில் தாங்க வைக்கணும் நீங்க எடுத்திருக்கிற செம்போட அளவு பொறுத்து 3, 5, 9 இந்த மாதிரி குங்கும போட்டு வைக்கலாம். நா இப்போ 3 பொட்டு வைக்கிற. நீங்க அப்படி குங்குமம் போட்டு வைக்கிறத சரியான முறையில் நேர்த்தியா வைக்கணும் என நீங்க ஒரு விஷயத்தை கடமைக்கு பண்ணாம மிகவும் நேர்த்தியாக நம்பிக்கையுடன் செய்யறப்ப அதற்கான பலன் கூடுதலாகவே கிடைக்கும்.
இப்ப குங்கும பொட்டு வைத்து முடித்தவுடன் சொம்ப தரையில வைக்காமல். ஒரு சிறிய தட்டு எடுத்து அடில வச்சு அதுல சிறிது குங்குமம், மஞ்சள், அர்ச்சதையை போட்டு அதுக்கு மேல இந்த சொம்ப வைத்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு நீங்க ஒரு தட்டு வைக்கிறதுக்கு பதிலா அடியில ஒரு வெத்தலையை வைத்து அதற்கு மேல் இந்த பொருள் எல்லாம் வைத்து கலசத்தை வைத்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பா இருக்கும். வெத்தலை இல்லாதவங்க தட்டு வச்சுக்கோங்க. அப்புறமா இந்த சொம்பு நிரம்பி இருக்கிற மாதிரி தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் நிரம்பியதும் இந்த தண்ணீரில் நம்ம சில பொருட்கள் சேர்க்க வேண்டும் குங்குமம், மஞ்சள் தூள், பச்சை கற்பூரம், அர்ச்சதை இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்துட்டு உங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கேட்ப இந்த மாதிரி one rupee coin, 2 ruppes, 5 rupees coins எடுத்துக்கோங்க இப்ப இந்த நாணயங்களை வீட்ல உள்ளவங்க ஒவ்வொருத்தரும் பேர் சொல்லி தண்ணீரில் போட்டுக்கோங்க.
லட்சுமி கடாட்சம்
இப்ப இந்த நாணயங்களை நீங்க போட்டு முடிச்சதும் இந்த சொம்போட கழுத்துப் பகுதியில் பூ வைக்கணும் இப்படி நீங்க பூ வைக்கும் போது இந்த சொம்பு ஒரு லட்சுமி கடாட்சமாக இருக்கும். அவ்வளவுதான் இப்போ இந்த சொம்புவை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து அதற்கு தீப ஆராதனை காண்பித்து இந்த கலசத்தை உங்கள் கைகளால் தொட்டு கும்பிட்டு உங்களோட கோரிக்கை என்னென்ன அதெல்லாம் சொல்லுங்க உங்க வீட்டுக்கு பணம் தேவை அதிகமாக இருக்கா பண வர வேண்டும்னு வேண்டிக்கோங்க, நீங்கள் வேலை பார்க்கிற இடத்துல உங்கள் சம்பளம் அதிகரிக்கனுமா சம்பளம் அதிகரிக்க வேண்டும் நீங்கள் சம்பாதிக்கிற பணம் கையில் நிலையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கோங்க.
வருடம் ஒரு முறை செய்தால் போதும்
இப்படி உங்கள் கோரிக்கைகள் எல்லாம் சொல்லி வேண்டிகிட்டா கண்டிப்பாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை செஞ்சா போதும் அதுக்குனு வாராவாரம் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யணுமான்னு கேட்டா ஞ. அதற்கு அவசியம் இல்லை இந்த பரிகாரத்தை நீங்கள் வருடத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை செய்தால் மட்டும் போதும் அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு உங்கள் கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் உங்களுக்கு பணக்கஷ்டம் என்று ஒன்று வரவே வராது நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.



