வீண் செலவுகள் குறைந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட செய்ய வேண்டியவை!!

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பணத்தை உழைத்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் நம் கையில் தங்குவதே கிடையாது. பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவோம். தேவையற்ற சூழலுக்காக பணம் வாங்குவதை தவிர்த்து

By ·

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பணத்தை உழைத்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் நம் கையில் தங்குவதே கிடையாது. பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவோம். தேவையற்ற சூழலுக்காக பணம் வாங்குவதை தவிர்த்து தேவையான சூழலுக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். சம்பாதித்த பணமும் சரி கடன் வாங்கும் பணமும் சரி ஏதாவது வீண் விரயம் ஆகிக்கொண்டே தான் இருக்கும். அப்படி இருக்கும்போது பணம் வீண் செலவாகாமல் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட இந்த ஆன்மிகம் சம்பந்தமான வழிபாட்டை செய்து பாருங்கள்.

வீண் செலவு

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீண் செலவாக செலவாகி கொண்டே இருந்தால் மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருக்கும். வீண் செலவுகளால் நம்மால் சேமிக்க முடியாத சூழலில் ஏற்படும் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படும். இவை அனைத்தையும் நீக்கி வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என்றால் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

சிவபெருமான் வழிபாடு

இந்த வழிபாட்டை திங்கட்கிழமை செய்வது நல்லது சிவபெருமான் கோவிலுக்கு சென்று அங்கு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வைத்து வில்வ இலைகளை வாங்கி சிவபெருமானுக்கு வைத்து வழிபட வேண்டும். வீட்டில் உள்ள அனைவரின் பெயர்களையும் கூறி வில்வ அர்ச்சனை செய்வது நல்லது நம் கைகளால் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை சிவபெருமானுக்கு நெய்வேதியம் ஆக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

சிவபெருமானும் கடன் இல்லாத வாழ்க்கையும்

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இந்த வழிபாட்டை செய்து வருவதால் வீண் செலவுகள் குறைந்து கடன் பிரச்சினைகள் குறைந்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். பணவரவு தடையின்றி கைக்கு வந்து சேரும் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் அதிக அளவில் கடன் பிரச்சினை இருக்கிறது என்றால் இந்த வழிபாட்டை தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் செய்ய வேண்டும். குறைவான கடன் பிரச்சினைகள் இருந்தால் எட்டு திங்கள் கிழமைகள் செய்யலாம் சிவபெருமானை முழுமனதோடு நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!

Recipes AMP · Quick view
View full