லட்சுமி தேவியின் அருளை பெற வீட்டில் வைத்து வணங்க வேண்டிய பொருட்கள்!
வாழ்க்கை வாழ பல விஷயம் முக்கியமானதாக இருக்கிறது.அதில் உடம்பில் உயிர். மனதில் இறைவன் பிறகு ஆரோக்கிய தேகம்.அந்த தேகம் பாதுகாக்க நல்ல உணவு. நல்ல உணவிற்கு கையில் பணம்.இவை எல்லாம் இருந்தால் தான் மனிதன் ஒரு வாழ்க்கை நன்றாக வாழமுடியும். அப்படியாக இதை எல்லாம் நாம் ஓடி சம்பாதித்தாலும் அது
வாழ்க்கை வாழ பல விஷயம் முக்கியமானதாக இருக்கிறது.அதில் உடம்பில் உயிர். மனதில் இறைவன் பிறகு ஆரோக்கிய தேகம்.அந்த தேகம் பாதுகாக்க நல்ல உணவு. நல்ல உணவிற்கு கையில் பணம்.இவை எல்லாம் இருந்தால் தான் மனிதன் ஒரு வாழ்க்கை நன்றாக வாழமுடியும். அப்படியாக இதை எல்லாம் நாம் ஓடி சம்பாதித்தாலும் அது நம் கையில் தங்க கடவுளின் மஹாலக்ஷ்மியின் அருள் கண்டிப்பாக தேவை. இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு தனி இடம் உண்டு. செல்வத்தின் தெய்வமாக அனைவரும் லட்சுமி தேவியை வழிபடுகின்றனர்.
லட்சுமி தேவி செல்வம், புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னம். லட்சுமியின் ஆசீர்வாதத்தால் வீடு மற்றும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே லட்சுமி தேவியை வழிபடுவதால் பொருளாதார நெருக்கடிகள் நீங்குவது மட்டுமல்லாமல் செல்வமும் கிடைக்கும். அன்னையின் அருளைப் பெற வீட்டில் வைத்து வணங்க வேண்டிய பொருட்களைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
வர லட்சுமி விரதம்
மகாலட்சுமியின் அருளை பெருவதற்காக கடைபிடிக்கப்படும் எத்தனையோ முக்கியமான விரதங்களில் ஒன்று வரலட்சுமி விரதம். பொதுவாக அம்மன் வழிபாட்டிற்குரிய விரதங்கள் அனைத்தும் ஆடி மாதத்தில் தான் வரும். ஆனால் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பெளர்ணமிகள் வந்தால் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வரும். இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
தாமரை மலர்
உலகில் பல வகையான மலர்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளுக்கு விருப்பமானது. ஒரு சில மலர்கள் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. குறிப்பாக செல்வ மகளான லட்சுமி தேவி வாசம் செய்வதாகக் கருதப்படும் தாமரை மலருக்கென்று சில சூட்சம ஆற்றல்கள் உள்ளன. தாமரை மலரை செல்வத்தின் குறியீடாகவே பார்க்கலாம். எனவே தான் தாமரையில் அமரும் அன்னையை மலர்மகள் என்று அழைக்கிறோம். திருமகளுக்குரிய இடம் தாமரை, எனவே தாமரையை வணங்கினாலே அன்னை லட்சுமியை வணங்கியதாக அர்த்தம். மகாலட்சுமி படத்திற்கு தாமரைக் பூவினை சமர்ப்பித்து, தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் கடைக்கண்கள் உங்கள் மீது பட்டு உங்களுக்கு செல்வப் பெருக்கு ஏற்படுத்தும்.
திருமாலின் மார்பில் உறையும் லட்சுமி
திருமாலின் மார்பில் வசிக்கிறாள் அன்னை மகாலட்சுமி. அந்த திருவேங்கடமுடையானை வணங்கும் முன்பாக அலமேல் மங்காபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அலமேல் மங்கையை வணங்கினால் போது அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. அடியாருக்கு அருள்புரியும் படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே என்பதால், பெருமாலை வணங்கினால், திருமகளின் அருள் நிச்சயம் உண்டு. அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் அன்னை மகாலட்சுமி தன்னையும் , திருமாலையும் வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்குவார் என நம்பப்படுகிறது.
குபேரன்
கோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. கோடீஸ்வரர் ஆக குபேரனின் அருள் கிடைக்க வேண்டும். பணக்காரர் ஆக வேண்டும் என்றால் குபேரன் அருளுடன் மகாலட்சுமியின் அருளும் கிடைக்க வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான குபேரரின் அருளைப் மகாலட்சுமியை வணங்கினாலே போதும். அன்னையை வணங்கினாலே குபேரரையும் வணங்கியதாக பொருள்.
நெல்லிக்காய்
நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து உறைவதாகச் சொல்கின்றன புராணங்கள். அதனால் நெல்லிக்கு `ஹரிபிரியா’ என்ற பெயரும் உண்டு. , எனவே நெல்லிக்கனியை உண்பதும், அதை பூஜையறையில் வைத்து பூஜைக்கு பயன்படுத்துவதும் செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும் என சொல்லப்படுகிறது.
வில்வம்
வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் ஒரு வில்வம் கொண்டு பூஜை செய்வது ஒரு லட்சம் தங்க மலர்களால் பூஜை செய்ததற்கு சமமாகும். சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப்பட்டுள்ளது. எனவே வில்வத்தைக் கொண்டு அன்னையை வணங்கினால் பண வரவு நிச்சயம்.
உள்ளங்கை
உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.
வேள்விப்புகை
வேள்விப் புகை உயிர் காக்கும். வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். அத்தகைய வேள்வி புகையில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அதனால் வேள்வி புகையை வணங்கலாம்.
திரு விளக்கு
நாம் வாழும் உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம் பொறிகளால் தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் திரு விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். தினசரி வீட்டில் விளக்கேற்றினால் அங்கு செல்வ செழிப்பு நிச்சயம் இருக்கும்.
பசு
இந்து மத வேதங்களின் படி லட்சுமி தேவி பசுவின் பின்புறம் வசிப்பதாக கூறப்படுகிறது. பசு வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக இந்து மதத்தில் இருக்கிறது. பசுக்களை வணங்கி வழிபாடு செய்வது என்பது நமது பாரம்பரியத்தில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக பசுவிற்கு உணவளித்து வழிபடுபவர்களுக்கு செல்வமும் லட்சுமி தேவியின் அருளும் முழுமையாக கிடைக்குமென புராணங்கள் கூறுகிறது.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி தேவியின் அருள் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? வீட்டு வாசலில் இதை மட்டும் கட்டி விடுங்கள்!