சாதம் வடிக்கும் போது பெண்கள் பின்பற்ற வேண்டியவை!!
ஒரு வீட்டில் பெண்கள் தான் எப்பொழுதுமே மகாலட்சுமி அம்சமாக கருதப்படுவார்கள். ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி பணக்காரர்களாக இருந்தாலும் சரி அனைவருடைய வீட்டிலுமே பெண்கள் தான்
ஒரு வீட்டில் பெண்கள் தான் எப்பொழுதுமே மகாலட்சுமி அம்சமாக கருதப்படுவார்கள். ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி பணக்காரர்களாக இருந்தாலும் சரி அனைவருடைய வீட்டிலுமே பெண்கள் தான் அந்த வீட்டில் மகாலட்சுமியின் ஸ்வரூபமாக இருப்பார்கள். மகாலட்சுமி அம்சம் பொருந்திய பெண்கள் வீட்டில் சாதம் வடிக்கும் போது ஒரு சில விஷயத்தை பின்பற்ற வேண்டும். வீட்டில் சந்தோஷத்திற்கு நிகராக பொன் பொருள் தனம் தானியம் அனைத்தும் பெருக தொடங்கும். அனைத்து செல்வ வளங்களும் உங்களுடைய வீட்டில் நிரம்பி வழியும் இதற்கு பெண்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதம் வடிக்கும் போது பெண்கள் பின்பற்ற வேண்டியவை
வீட்டில் சாதம் வடிக்கும் போது அன்னலட்சுமியான அரிசியை எடுத்து சமைக்க பயன்படுத்தும் போது அன்னபூரணி தேவிக்கு வணக்கம் சொல்லிவிட்டு சமைப்பதற்காக அரிசியை எடுக்க வேண்டும்.
அப்பொழுது அன்னபூரணியே நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
அரிசியை கழுவி அடுப்பில் வைக்கும் போது அன்னபூரணி தாயை மனதில் நினைத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நல்லபடியாக உணவை சாப்பிட வேண்டும் என்று நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு பிறகு அடுப்பில் வைக்க வேண்டும்.
குக்கரில் சாதம் வைக்கும் போதும் இதனை பின்பற்றலாம்.
அரிசி அன்னபூரணியின் அம்சம் பொருந்தியது. கல் உப்பு, மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. இவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்து சமைக்கும் போது வீட்டில் தனம் தானியம் இரண்டிற்கும் குறைவே வராது. ஒரு சிலர் வீட்டில் சாதம் வடிக்கும் போது கல் உப்பு சேர்க்க மாட்டார்கள் ஆனால் கல் உப்பு சேர்த்து சாதம் வடித்தால் மகாலட்சுமி அன்னபூரணி இருவருடைய அருளையும் பெற முடியும்.
சாதத்தில் கல் உப்பு சேர்ப்பது ருசிக்காக மட்டுமில்லாமல் ஆன்மீக ரீதியாக இந்த ஒரு காரணமும் உள்ளது.
மேற்கூறிய விஷயங்களை பின்பற்றி வீட்டில் சாதம் வடித்துப் பாருங்கள் நிச்சயமாக வீட்டில் லாபம் அதிகரிக்கும் பொன் பொருள் அதிகமாக சேரும். வீட்டில் வறுமையே இருக்காது.எதற்குமே பஞ்சம் இல்லாமல் நல்ல வாழ்க்கையை வாழ முடியும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய அவசியம் நாம் கடை பிடிக்க வேண்டியவை!!