எதிரிகள் தொல்லை நீங்க நெற்றியில் வைக்க வேண்டிய திலகம்!!
வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் அனைவருக்குமே அவர்கள் பார்க்கும் வேலைக்கு என்று ஒரு போட்டி பொறாமை இருக்கும். சில சமயத்தில் அது எதிரிகள் அளவிற்கு கூட கொண்டு போய்விடும். அவைகளை எல்லாம் சமாளித்து சம்பாதிப்பது என்பது ச
வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் அனைவருக்குமே அவர்கள் பார்க்கும் வேலைக்கு என்று ஒரு போட்டி பொறாமை இருக்கும். சில சமயத்தில் அது எதிரிகள் அளவிற்கு கூட கொண்டு போய்விடும். அவைகளை எல்லாம் சமாளித்து சம்பாதிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதே சமயத்தில் வருமானத்தில் எந்த பணத்தடை வராமலும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் இவைகளை எல்லாம் சரி செய்து எதிரிகளை ஓட வைக்க கூடிய ஒரு திலகம் செய்து நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கை முழுவதுமாக இருப்பவர்கள் இதனை செய்து பார்க்கலாம். இதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
திலகம் செய்ய தேவையான பொருட்கள்
இந்த திலகத்தை செய்வதற்கு நமக்கு இலவங்கம் பன்னீர் கசகசா போன்ற மூன்று பொருட்களும் தேவைப்படும். லவங்கம் மற்றும் கசகசாவை பன்னீரில் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ள வேண்டும். குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து திலகத்திற்கு சக்தி ஊட்டி தினமும் வைத்துக் கொள்ள வேண்டும்.
திலகம் செய்யும் நன்மைகள்
தினம் தினம் அந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதால் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். இல்லையெனில் உங்களுக்கு எந்த கெடுதலும் நினைக்க மாட்டார்கள் வேலை தொழில் வியாபாரம் என அனைத்து இடத்திலும் உங்களுக்கு எந்த போட்டி பொறாமைகளும் இருக்காது உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஏனென்றால் அந்த திலகத்தில் நிறைய வசிய தன்மை உள்ளது.
திலகத்தை வைத்துக் கொள்ள வேண்டிய நபர்கள்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் தின அனைவருமே இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம் மாணவர்களும் கூட பள்ளிக்கு செல்லும்போது நெற்றியில் நின்று திலகத்தை வைத்துக்கொண்டு செல்லும்போது தேர்வு நல்ல படியாக எழுதலாம் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது சக மாணவர்களுடன் இந்த சண்டை சச்சரவும் போட்டி பொறாமையோ வராது. மேலும் நெற்றியில் இதனை வைத்துக் கொள்ள முடியாதவர்கள் உச்சம் தலையிலும் தடவிக் கொள்ளலாம். இந்த வசிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதனை பின்பற்றி பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : உங்கள் எதிரிகள் என்ன செய்தாலும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமா ? சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம்!!