பணம் வீட்டில் அதிகமாக சேர பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!

பணம் தான் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம். பணம் இல்லையென்றால் இந்த உலகத்தில் நாம் அனைவரும் செய்ய முடியாது இந்த மொத்த உலகத்தையும் ஆட்டி வைப்பது பணம் மட்டுமே. பணம் இன்றி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணம் நம்மிடம் தடையில்லாமல் இருப்

By ·

பணம் தான் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம். பணம் இல்லையென்றால் இந்த உலகத்தில் நாம் அனைவரும் செய்ய முடியாது இந்த மொத்த உலகத்தையும் ஆட்டி வைப்பது பணம் மட்டுமே. பணம் இன்றி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணம் நம்மிடம் தடையில்லாமல் இருப்பதற்கு பணம் வீண் விரையமாகாமல் பெருகிக்கொண்டே இருப்பதற்கு பல தாந்திரிக முறைகள் இருக்கின்றது. பணத்தை நாம் எப்படி வைத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் நம்மிடத்தில் அதிகமாக பணம் வந்து சேரும். அந்த வகையில் பணம் அதிகமாக பெருக பணத்தை எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

பணத்துடன் சேர்த்து வைக்க வேண்டிய பொருள்

பணத்தை நாம் வீட்டில் எங்கு வைத்தாலும் அதனுடன் பணத்தை ஈர்க்கக் கூடிய சில பொருட்களை வைக்க வேண்டும்.

பணத்தை ஈர்க்கக் கூடிய பொருள்கள்

ஏலக்காய், பச்சைக் கற்பூரம், அரக்கஜா, புனுகு, கோரோசனை, கருங்காலிக் கட்டை, கருங்காலி மாலை, கிராம்பு, துளசி இலை, வில்வ இலை போன்றவை பணத்தை அதிகமாக ஈர்த்துக் கொடுக்கக்கூடிய ஒரு சில பொருட்கள் எனவே பணத்தை எங்கே வைத்தாலும் இந்த பொருட்களை வைக்க வேண்டும். அந்த பொருட்கள் காய்ந்தவுடன் அதனை எடுத்து விட்டு புதிதாக பொருட்களை வைக்க வேண்டும்.

பணத்தை ஈர்க்கக்கூடிய கோவில் பிரசாதம்

கோவிலுக்கு சென்றால் அங்கு நமக்கு விபூதி குங்குமம் கொடுக்கப்படும் அந்த பிரசாதத்தை கொண்டு வந்து நெற்றியில் இட்டுக்கொண்டு பணம் நகை வைக்கக்கூடிய இடத்தில் வைக்கலாம் மேலும் பணத்தையும் நகையையும் மஞ்சள் அல்லது பச்சை நிற துணியில் வைக்க வேண்டும். மேலும் பணம் வைக்கக்கூடிய இடத்தில் பெருமாள் குபேரர் மகாலட்சுமி தாயார் போன்ற தெய்வங்களுடைய படத்தையும் வைக்கலாம்.

பணத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது பொருள்

பணத்தின் அருகில் ஒரு சில பொருட்களை வைப்பதால் பணம் வீண் விரயம் ஆகுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. படம் வைக்கக்கூடிய இடத்தில் என்னை சம்மந்தமான பொருட்களை வைக்கக்கூடாது. பணத்திற்கு பக்கத்தில் அடகு சீட்டு கடன் வாங்கிய பத்திரம் மருந்து சீட்டு போன்றவற்றையும் வைக்கக்கூடாது. மேலும் ஊசி கத்திரிக்கோல் ஓடாத கடிகாரம் கத்தி போன்ற இரும்பு சம்பந்தமான பொருட்களையும் பணத்தின் அருகில் வைக்கக்கூடாது.

இவைகளை பின்பற்றி வந்தால் நம்மிடம் நிலையாக பணம் தங்கும் பணம் வீண்விரயம் ஆகாது.

இதனையும் படியுங்கள் : வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு போதும்!

Recipes AMP · Quick view
View full