வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு போதும்!

- Advertisement -

ஒருவரின் வாழ்க்கையில் பணம் இல்லை என்றால் அந்த வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. தற்போதைய உலகில் பணம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆம் இன்றைக்கும் பல குடும்பங்கள் போதிய பணம் இல்லாமல் தங்களின் பல சந்தோசங்களை இழந்து வருகின்றனர். ஏன் தங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லாமல் பலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது என்றால் அவர்களது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யவில்லை என்று தான் அர்த்தம். அதனால் இந்த ஒரு விளக்கை வறுமையில் இருக்கும் உங்கள் வீட்டில் ஏற்றினால் போதும் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அதைப் பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணப் போகிறோம்.

-விளம்பரம்-

உப்பு தீபம்

பெரும்பாலான நபர்களுக்கு உப்பு தீபம் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த உப்பு தீபத்தை உங்களது வீட்டில் ஏற்றி வைப்பதால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வால். அதனால் இந்த உப்பு தீபத்தை எந்த நாளில் ஏற்ற வேண்டும்? எப்படி ஏற்ற வேண்டும்? நேரம் காலங்கள் என பலருக்கு எதுவும் தெரிந்திருக்காது. அதனால் நாம் அதையும் சேர்த்து இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

- Advertisement -

தேவையானவை

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பூஜையை செய்ய உங்களுக்கு ஒரு பெரிய தாம்பூல தட்டு, மூன்று அகல் விளக்கு அதில் ஒரு பெரிய அகல் விளக்கு, இரண்டு அகலமான விளக்கு மற்றும் சிறிது கல் உப்பு எடுத்து கொள்ளவும். முதலில் பூஜை அறையை சுத்தப்படுத்தி மகாலட்சுமி தாயாரின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு பூ வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்பு தயாரின் முன்பு தாம்பூல தட்டை வைத்து. பின் மஞ்சளில் பன்னீர் சேர்த்து குழைத்துக் கொண்டு அகல் விளக்கில் பூசி அதற்கு குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய் மற்றும் பௌர்ணமி

பின்பு தாம்பூல தட்டில் பெரிய அகல் விளக்கு வைத்து அதில் உப்பை சிதறாமல் நிரப்பி கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்க வைத்து அதில் மஞ்சள் நிரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்க வைத்து அதில் திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் வைத்திருக்கும் தாம்பூல தட்டை சுற்றி மலர்களை வைத்துக் கொள்ளுங்கள். பின்பு விளக்கின் முன் அமர்ந்து மகாலட்சுமி தயாரை நினைத்து மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். பின் பூஜை முடிந்த பின் அந்த கல் உப்பை மனித கால்கள் படாத இடத்தில் போட்டு விடுங்கள் அல்லது தண்ணீரில் கரைத்து விடுங்கள். இப்படி இந்த தீபத்தை நீங்கள் தினமும் ஏற்றலாம் அல்லது வாரத்தில் செவ்வாய் மற்றும் பௌர்ணமி தினங்களில் ஏற்றுவது சிறப்பாக இருக்கும்.

பணகஷ்டம் தீரும்

இப்படி மகாலட்சுமிக்கு தாயாரை மனதார நினைத்து உப்பு தீபம் ஏற்றும் பொழுது உங்களது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் சூழ்ந்து கொள்ளும் அதனால் மகாலட்சுமி தேவியும் உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். மகாலட்சுமி தயார் வாசம் செய்யும் வீட்டில் வறுமை ஒருபோதும் இருக்காது. அதனால் உங்களது பணக்கஷ்டம் தீர்ந்து உங்களிடம் பணம் வரவு அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையும் சந்தோசமாக இருக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here