துளசி செடி பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்!!
இந்துக்களின் வழிபாட்டு முறையில் விருட்சங்களை வழிபடுவது முக்கியமான ஒன்றாகும். இவற்றில் மிக முக்கியமானது துளசி. துளசி செடியை வெறும் செடியாக பார்க்காமல் மகாலட்சுமியின் அம்சமாக நினைத்து வழிபடுவது வழக்கம். துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர
இந்துக்களின் வழிபாட்டு முறையில் விருட்சங்களை வழிபடுவது முக்கியமான ஒன்றாகும். இவற்றில் மிக முக்கியமானது துளசி. துளசி செடியை வெறும் செடியாக பார்க்காமல் மகாலட்சுமியின் அம்சமாக நினைத்து வழிபடுவது வழக்கம். துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர். மற்ற தேவர்களும் துளசி செடியை பூஜிக்கிறார்கள். அதேபோல் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாக துளசி செடியை வைத்து வழிபட வேண்டும் என்பது விதி.
எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும் என நம்பப்படுகிறது. இத்தகைய புனிதமான தெய்வீக தன்மை கொண்ட துளசி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
துளிசி பற்றிய தகவல்கள்
துளசிச் செடியைப் பறிக்கும் போது, அதன் இலைகளைத் துளசி தேவியிடம் அனுமதி கேட்டு இந்த மந்திரத்தை உச்சரித்து பறிக்க வேண்டும்.
“அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ’
துளசி செடி மகாவிஷ்ணுவின் அம்சமாகவும், விஷ்ணுவின் மனைவியாகவும், பிருந்தா என்றும் அழைக்கப்படுகிறாள். துளசி தேவி மகாவிஷ்ணுவை மணந்த நாள் — ஐப்பசி மாத சுக்லபட்ச துவாதசி. ஆகவேதான், அன்றைய தினத்துக்கு ‘ப்ருந்தாவன துவாதசி ‘ என்று பெயர்.
நாம் எந்த ஒரு பொருளையும் தானம் செய்யும் போதும், அந்தப் பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின் அளவும் மதிப்பும் கூடும் என நம்பப்படுகிறது.
மகாலட்சுமி சொரூபமான துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்கிறார். அதனால் துளசிக்கு விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் உண்டு.
“துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்த குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன்” என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே துளசி நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.
மார்க்கண்டேயருக்கு துளசி செடி குழந்தை உருவில் கிடைக்கப்பெற்றாள். திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்கொண்டதால் திருமால் திருமேனியை எப்போதும் அலங்கரிக்கும் பாக்கியம் துளசிக்குக் கிடைத்தது.
சகல சௌபாக்கியங்களும் பெற துளசியால் மகாவிஷ்ணுவை நியமத்துடன் அர்ச்சித்தாலே போதும் வீட்டையும், குலத்தையும் காக்கும்.
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர் என நம்பப்படுகிறது.
துளசிக்கு ஸுலபா, ஸரசா, அம்ருதா, ச்யாமா, வைஷ்ணவி, கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன.
பிருந்தை மகாவிஷ்ணுவை மணக்க தவம் செய்தாள்; அடுத்த பிறவியில் ஜலந்திரன் என்னும் அரக்கனை மணந்தாள். ஜலந்திரன் “என் மனைவி கற்பை இழந்தால் தான் நான் மரணமடைவேன்” என்ற வரம் பெற்றிருந்தான். ஜலந்திரனை அழிக்க விஷ்ணு மாயையாக வந்து பிருந்தையின் பதிவிரத தன்மையை உடைத்தார். அதனால் ஜலந்திரன் கொல்லப்பட்டான். அதனால்
பிருந்தை விஷ்ணுவை சாபமிட்டு தீயில் தன்னை அர்ப்பணித்தாள். ஆகையால் பிருந்தையின் சாம்பல் தான் துளசி மாலையாகி, அவள் துளசி தேவியாக விஷ்ணுவுடன் இணைந்தாள்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, சதுர்த்தசி, அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, சந்திர கிரகணம் ஏகாதசி திதிகளில் துளசி செடி பறிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி பறிப்பதால் துரதிஷ்டம் வந்து சேருவதுடன், மகாலட்சுமியின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.
துளசியை வழிபடுவதால் செல்வ வளம், மகிழ்ச்சி, வளர்ச்சி, ஆன்மிக பலம் ஆகியவற்றை வழங்குவதாக ஐதீகம்.
துளசியில் பல வகைகள் உள்ளன அதில் பச்சை இலைகளைக் கொண்ட ராம துளசி மற்றும் ஊதா இலைகளைக் கொண்ட கிருஷ்ண துளசி, நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி மற்றும் கற்பூர துளசி ஆகியவை உள்ளன.
துளசி செடியை வலம் வரும் போது ஏழு என்ற எண்ணிக்கையிலேயே வலம் வர வேண்டும். மகாலட்சுமியை மனதில் நினைத்தபடியும், மகாலட்சுமி அல்லது துளசிக்குரிய மந்திரங்களை ஜபித்தபடி வலம் வர வேண்டும்.
தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் துளசியை வடகிழக்கு திசையில் நடுவது நல்லது. துளசியை வைக்கும் போது முகத்தை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். துளசியை தெற்கு திசையில் நடக்கூடாது.
துளசி மாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமியின் அருளும், செல்வமும் வீட்டில் பெருக துளசியை மட்டும் இப்படி வழிபடுங்கள் போதும்!