மகாலட்சுமியின் அருளும், செல்வமும் வீட்டில் பெருக துளசியை மட்டும் இப்படி வழிபடுங்கள் போதும்!

- Advertisement -

துளசி செடி மகாலட்சுமி அம்சமாக இந்து மதத்தில் வழிபடப்படுகின்றது. துளசி செடியை வழிபட்டால் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியும் ஒன்றாக வழிபட்ட பலன் கிடைக்கும். இப்படி துளசி செடியை வழிபட்டு மகாலட்சுமி தேவியை விஷ்ணு பகவானின் மனமும் மகிழ்விப்பதால் நம் இல்லத்தில் செல்வம் பெருகும். வீட்டில் பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. தொழிலிருந்து தடைகள் எல்லாம் நீங்கும் . குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிரச்சனைகள் நீங்கும். இல்லத்தாரின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகள் குறைந்து ஆரோக்கியம் மேம்படும். இப்படி துளசி தேவியை வழிபடுவதால் நம் இல்லத்தில் பல நன்மைகள் நடைபெற்றாலும் முறையாக சில வழிபாட்டு பரிகாரங்களை செய்தால் மகாலட்சுமி தேவியின் அருளும் விஷ்ணு பகவானின் அருளும் கிடைத்து வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பணத்தட்டுப்பாடு இல்லாமல் பண வரவு அதிகரிக்கும். இல்லத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். உடல் நலத்தில் எந்த ஒரு குறைகளும் இருக்காது. இந்த துளசி செடி காண வழிபாட்டு பரிகாரங்களை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் சில விசேஷமான நாட்களிலும் துளசிக்கு இந்த பரிகார முறைகளை செய்து வீட்டில் இன்பமும் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்து சந்தோஷமாக வாழலாம்.

-விளம்பரம்-

நெய் தீபம்

தீபம் ஏற்றுதல் என்பது இந்து மதத்தில் மிகவும் நன்மை கொடுக்கக் கூடிய ஒரு செயலாக கருதப்படுகின்றது. அப்படி துளசி செடிக்கு மாலை நேரங்களில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் துளசி தேவி மகிழ்ந்து இல்லத்திற்கு மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் லட்சுமி கடாசக்தியும் கொடுப்பார்கள். தினமும் இல்லங்களில் எப்படியும் விளக்கேற்றி வழிபாடும் நடத்துவது இயல்பான ஒன்று. அதே போல மாலை நேரங்களில் துளசி செடிக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவதால் மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

திருமண பொருட்களை  வழங்குதல்

வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு திருமண பொருட்கள் அல்லது நலங்கு பொருட்களை வழங்குதல் வழக்கமான ஒன்றாகும். அப்படி துளசி செடிக்கு மாதங்களில் இரண்டு முறை வரும் ஏகாதேசிகளில் திருமண பொருட்கள் அல்லது நலங்கு பொருட்களை வழங்கினால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து அவர் அருள் புரிந்த லட்சுமி கடாட்சத்தையும் செல்வ செழிப்பையும் நமக்கு கொடுப்பார்.

இந்த திருமண பொருட்கள் அல்லது நலங்கு பொருட்களில் இருப்பவை என்னவென்றால் வளையல்கள், கண்ணாடி, சீப்பு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வெற்றிலை, பாக்கு, மலர், வாழைப்பழம் ,ஒரு சிகப்பு நிற துணி இவற்றை வைத்து துளசி செடிக்கு ஏகாதசி நாட்களில் வழங்கி வழிபடும் பொழுது மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இனிப்பு நெய்வேத்தியம் கொடுத்தல்

துளசி தேவிக்கு ஒவ்வொரு பஞ்சமி திதியிலும் நீரூற்றும் பொழுது இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமாக வழங்கி தூப தீப ஆராதனைகள் காட்டினால் மகாலட்சுமியின் மனம் மகிழ்ந்து வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் கிடைக்கும். ஒவ்வொரு முறை செடிக்கு நீரூற்றும் பொழுதும் நம்முடைய தேவைகளை கூறி பிரார்த்தித்துக் கொள்ளும் பொழுது துளசி நமக்கு அருள் புரிவார் நம் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார்.

-விளம்பரம்-

பால் வார்த்தல்

எப்படி கோவில்களில் உள்ள சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்கின்றோமோ அதே போல வீட்டில் வளர்க்கும் துளசிக்கும் பால் வார்த்தல் என்பது இறைவனுக்கு அபிஷேகம் செய்த பலனை கொடுக்கும். அது மட்டுமல்ல துளசிக்கு பால்வார்த்தல் என்பது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்வது மிகவும் விஷேசம். ஏகாதேசி திதியன்று செய்தாலும் இது நல்ல பலன்களை கொடுக்கும். இப்படி துளசிக்கு பால் வார்ப்பதன் மூலம் ஒருவரின் கஷ்டங்கள் நீங்கும். துரதிஷ்டம் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

தண்ணீர் வழங்குதல்

தண்ணீர் வழங்குதல் என்பது மிகவும் முக்கியமான ஒரு பரிகாரமாகும். இந்த தண்ணீர் வழங்குதல் நாம் தினமும் செய்வோம். நாம் நீர் ஊற்ற நீர் ஊற்ற செடியின் வளமை அதிகரிக்கும். ஆகையால் செடிக்கு நீர் ஊற்றுதல் என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். அப்படி துளசிக்கு தினமும் நீரூற்றும் பொழுது நம் மனக்குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நீரூற்றினால் உங்களுடைய கவலைகள் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியும் நிம்மதியும் வாழ்வில் அதிகரிக்கும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் துளசி செடியை வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். வீட்டில் இருக்கும் துளசி செடி வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி துளசி செடி வாடினால் அதை அபசகுணம் என்று கூறுவார்கள். ஆகையால் துளசி செடிக்கு நீர் வார்த்தல் என்பது மிகவும் முக்கியமான பரிகாரம் ஆகும். இப்படி வீட்டில் உள்ள துளசிக்கு பரிகாரம் செய்து இல்லத்தில் நிம்மதி, சந்தோசம், ஆரோக்கியம், செல்வ செழிப்பு, போன்றவையை பெற்று மகிழ்வாக வாழலாம்.