எதிரிகள் தொல்லை விலக, நினைத்த காரியங்கள் நடக்க கூற வேண்டிய வாராகி மந்திரம்!!
வாழ்க்கையில் அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும் என்று தான் மனிதர்களின் மனம் நினைக்கிறது. கடவுளிடம் வைக்கும் கோரிக்கைகள் கூட உடனடியாக நடந்து, நம்முடைய கஷ்டங்கள் உடனடியாக தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ் வேண்டும், வாழ்க்கையில் உடனடியாக முன்னேறி, பணக்காரர் ஆகி விட வேண்டும் என்று தான் அனைவர
வாழ்க்கையில் அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும் என்று தான் மனிதர்களின் மனம் நினைக்கிறது. கடவுளிடம் வைக்கும் கோரிக்கைகள் கூட உடனடியாக நடந்து, நம்முடைய கஷ்டங்கள் உடனடியாக தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ் வேண்டும், வாழ்க்கையில் உடனடியாக முன்னேறி, பணக்காரர் ஆகி விட வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கிறோம். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்க வேண்டும். தினசரி நாம் செய்யும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் அனைவருக்கும் நினைக்கும் அனைத்தும் நடந்து விடுவது இல்லை. நாம் ஒன்று நினைத்திருப்போம் அது ஒன்று நடந்து முடிந்திருக்கும் இது அனைவருக்குமே பொருந்தும். அப்படிப்பட்டவர்கள் வாராகியை நினைத்து செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் காணலாம்.
வாராகி வழிபாடு
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராகி. மிருகபலமும், தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற மனநிலையில் இருப்பவர்கள் கூட வாராகியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை. எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள், கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், வறுமை நீங்க, வாழ்க்கையில் சந்தோஷம் நிலைக்க வாராகி அம்மனை எப்படி வழிபடலாம் என்று பார்க்கலாம்.
வாராகி மந்திரம்
வாராகி அம்மனுக்கு என்று மூலமந்திரம் காயத்ரி மந்திரம் என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. எதிரிகள் தொல்லை நீங்க, தொழிலில் சிறந்து விளங்க, தடைப்பட்ட காரியங்கள் நடக்க என்று பலவிதமான பிரச்சனைகள் தீர்வதற்கு பல மந்திரங்கள் இருக்கின்றன. அதே போல் தான் நாம் நினைத்தது நடப்பதற்கு கூற வேண்டிய மந்திரமும் இருக்கிறது.
ஓம் ஐம் ஸ்ரீம் கிலீம் வாராஹி தேவியை நமஹ !
இந்த மந்திரத்தை தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சொல்லலாம் அல்லது நீங்கள் இல்லையெனில் மாலை 6:30 மணிக்கு மேலாக பூஜை அறையில் விளக்கு ஏற்றி வாராகி நினைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம். வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் மாதுளை பழம், வெல்லம், புளியோதரை, உளுந்து வடை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து மந்திரத்தை உச்சரித்து வழிபடலாம் அல்லது மனதில் “வாராகி வாராகி” என்று 8 முறை கூறி வாராகியை வழிபடலாம். இப்படி தொடர்ந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் மிகப் பெரிய மாற்றத்தை வாழ்வில் காணலாம். அதாவது இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால், எதிரிகள் தொல்லை நீங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும், காரிய வெற்றி உண்டாகும் என்று கூறப்படுகிறது. மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை வாராகி அம்மனை நினைத்து கூறி பலன் பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் உள்ளவர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வராகி அம்மனை இப்படி வழி பட வேண்டும்!