வீட்டில் உள்ளவர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வராகி அம்மனை இப்படி வழி பட வேண்டும்!

- Advertisement -

சமீபத்தில் நிலவிய கொரோனா சூழ்நிலையில் பணம், வீடு, தோட்டம் துரவு போன்றவற்றுடன் செல்வ செழிப்போடு வாழ்வதைவிட நோய் நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதை முக்கியம் என்பதை நம்மில் பலரும் உணர்திருப்போம். ஏன் நம் முன்னோர்களை நோய் நொடி இல்லாமல் வாழ்வதை தான் செல்வமாக கூறினார்கள். இப்படி வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும் காரணத்தால் நாம் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணமும் கூட வீண் விரையமாகிறது. அகையால் நோய்நொடி இல்லாத சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு வராகி அம்மன் வழிபாடு முக்கியம். ஆதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்கு வராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெளிவாக காணலாம் வாருங்கள்.

நாம் வராகி அம்மனை வழிபடுவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் வழிபட வேண்டும் அதுவும் காலை 6:00 மணி முதல் இரவு 9.00 மணிக்குள் வழிபட வேண்டும் இல்லையன்றால் ஞாயிற்றுக்கிழமை வரும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். நாம் வராகி அம்மனை பூஜை செய்வதற்கு வராகி அம்மனின் உருவ சிலை வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏன் வாராகி அம்மனின் திருஉருவ படம் இல்லை என்றாலும் பரவாயில்லை

- Advertisement -

அதற்கு பதிலாக எப்பொழுதும் போல் உங்கள் பூஜை அறையை சுத்தப்படுத்தி தெய்வங்களுக்கு பூ சூட்டி பூஜை அறையில் ஒரு தாம்பூல தட்டை எடுத்து வைத்து அதன் மேல் ஒரு கைப்பிடி பச்சரிசி நெல்லை வைத்து அதன் மேல் ஒரு பெரிய அகல் விளக்கு வைத்து ஐந்து திரி போடுங்கள். ஏனென்றால் வராகி அம்மனை நாம் பஞ்சமுக தேவி, பஞ்சமி தேவி என பஞ்ச பூதங்களுடன் ஒப்பிட்டு அழைப்பதால் விளக்கில் ஐந்து திரி போடுவது மிகவும் சக்தி வாய்ந்தது.

இப்படி விளக்கு ஏற்றி முழு மனதுடன் பயபக்தியுடன் வாராகி அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு நெல்லிக்காயை நிவேதனமாக வைத்து மாதுளை பழம் மற்றும் குங்குமத்தை அர்ச்சனை பொருளாக வைத்து 108 முறை “ஓம் வராகி தேவையை போற்றி” என்று மந்திரத்தை உச்சரித்து. வீட்டில் உள்ளவர்கள் எந்தவித நோய் நொடி இல்லாமல் வளமாக வாழ வேண்டும் என வராகி அம்மனை வேண்டி பூஜையை நிறைவு செய்யுங்கள். பின் அர்ச்சனைக்கு வைத்த மாதுளை பழங்களை பிரசாதமாக கொடுத்து. உங்கள் வீட்டில் நோய் நொடியால் அவதிப்படுவார்கள் இருந்தால் அவர்களுக்கு நீவேதனமாக வைத்த நெல்லிக்காயை சாப்பிட கொடுங்கள்.

-விளம்பரம்-

பின் நாம் ஏற்றிய விளக்கின் எண்ணெய் தீர்ந்ததும் மாதுளபழம் மரக்குச்சி அல்லது மருதாணி மர குச்சி வைத்து மகாலட்சுமியை வேண்டி விளக்கை குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு வராகி அம்மனுக்கு வைத்த பச்சரிசி நெல்லை மறுநாள் காலையில் காகம் குருவிகளுக்கு உணவாக வைத்து விடுங்கள். இப்படி ஞாயிற்று கிழமைகளில் வாராகி அம்மனை வழிபட்டு வந்தால் நம் வீட்டில் உள்ளவர்கள் எந்தவித உடல் நல குறைவும் இல்லாமல் வளமாக வாழ்வதற்கு வராகி அம்மன் அருள் புரிவாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here