வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்கு போக குலதெய்வம் கோவிலில் இருந்து இதை எடுத்து வாருங்கள்!
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய கனவு என்றால் அது சொந்தவீடு வாங்குவது அல்லது கட்டுவதுதான். சொந்த வீடு என்பது எல்லோருக்கும் எளிதாக அமைந்து
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய கனவு என்றால் அது சொந்தவீடு வாங்குவது அல்லது கட்டுவதுதான். சொந்த வீடு என்பது எல்லோருக்கும் எளிதாக அமைந்து விடாது. அதற்கென்று ஒரு யோகம் சுய ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். அதனால் வீடு கட்ட பல தடைகள் உங்களுக்கு வந்திருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் அப்படி ஏற்படும் தடைகளை நீக்கி விரைவில் நீங்கள் சொந்த வீடு கட்டுவதற்கு பரிகாரம் பற்றி பார்க்க இருக்கின்றோம்.
எவ்வளவு தான் சொத்து, பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு கனவு நிறைய வேற வேண்டும் என்பதற்காக எத்தனையோ கோவிலுக்கு சென்று, எத்தனையோ பூஜை வழிபாடு என செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்பவர்கள் வீட்டிலேயே இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எளிமையான இந்த பரிகாரத்தை குலதெய்வத்தை நினைத்து செய்து வந்தால் விரைவில் சொந்த வீட்டு யோகம் அமையும். அதனால் நம்பிக்கையுடன் இந்த சக்தி வாய்ந்த வழிபாட்டிவை செய்து வரலாம்.
சொந்த வீடு அமைய குலதெய்வ வழிபாடு
குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த ஆண் அல்லது பெண்ணை கடவுளாக பூஜித்து வணங்கப்படும் தெய்வமாகும். ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு. சொந்த வீடு கனவு நிறைவேற வேண்டும் என்றால் முதலில் செவ்வாய் பகவான் உடைய அருளும், குலதெய்வ அருளும் பெற வேண்டும். இவர்களின் அருளைப் பெற்றாலே போதும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நீங்கள் சொந்த வீட்டை கட்டி முடித்து விடலாம். குலதெய்வத்தின் அருளை பெற இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தாலே போதும்.
வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் முதலில் தங்கள் குலதெய்வ கோவிலுக்குச் செல்ல வேண்டும். முதலில் கோவிலுக்குள் சென்று ஒரு முறை தெய்வத்தை வணங்கிய விட்டு வெளியே வந்து விடுங்கள். பின் கோவிலின் வெளியில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு அமர்ந்து 27 அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி மேற்கு நோக்கியவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
கோவில் மண்
இந்த அகல் விளக்குகளை ஒன்பது ஒன்பதாக வைத்து மூன்று வரிசையில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த வரிசைக்கு நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் பச்சை கற்பூரத்தை வைத்து கற்பூரத்தை ஏற்றுங்கள். பின்னர் உங்கள் இரு கைகளை கூப்பி தீபத்தை பார்த்து சொந்த வீடு அமையும் வாய்ப்பை தர வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு கோவிலுக்குள் சென்று ஒரு முறை கோவிலை சுற்றி, கோவிலில் இருந்து மண் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுங்கள். நீங்கள் எடுத்து வந்த மண்ணை ஒரு சிறிய மண் பாண்டத்தில் வைத்து பச்சை நிற துணியால் மண்பாண்டத்தை கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் தினமும் விளக்கேற்றும் பொழுது இந்த மண்பாண்டத்திற்கு தீபாராதனை காட்டி, பூ வைத்து வழிபட்டு வாருங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வருவது மிகவும் நல்லது.
இதனையும் படியுங்கள் : குலதெய்வம் வீட்டில் இருப்பதை இப்படி தான் நம்மால் கண்டுபிடிக்க முடியும்! 6 எளிய அறிகுறிகள்!
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பது உண்மை. இந்த வழிபாட்டை நீங்கள் செய்து வந்த சில நாட்களிலேயே விரைவில் வீடு கட்டி விடுவீர்கள் அல்லது வாங்கி விடுவீர்கள்.