குலதெய்வம் வீட்டில் இருப்பதை இப்படி தான் நம்மால் கண்டுபிடிக்க முடியும்! 6 எளிய அறிகுறிகள்!

- Advertisement -

நம்ம குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நான் வணங்கி வந்து கொண்டிருப்போம் இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் நம்முடன் இருக்கிறார்களா என்பதை எப்படி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருக்கும்! குல தெய்வங்கள் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள் என்னென்ன ? இதையும் தாண்டி நான் உன் வீட்டில் தான் இருக்கிறேன் என்பதை அந்த குலதெய்வமே எப்படி எல்லாம் நமக்கு உணர்த்தும் என்பதை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்!

-விளம்பரம்-

குலதெய்வத்தின் மகத்துவம்

முதலில் குலதெய்வம் என்பவர்கள் யார் நமக்கு விருப்பமான கடவுள்கள் சிவன், விஷ்ணு, லட்சுமி, பிரம்மா, அனுமான், இப்படி யாராக இருந்தாலும் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு ஒடி வந்து உதவக்கூடிய தெய்வங்கள் தான் இந்த குல தெய்வங்கள். ஏன் உண்மையாக சொல்ல போனால் நீங்கள் விரும்பக்கூடிய கடவுள்களிடம் பிரார்த்தனை வைக்கும் போது அவர்கள் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு, உங்களுக்கு உதவுவதற்கு உங்கள் குலதெய்வத்திடம் முதலில் உத்தரவு வாங்க வேண்டும். அதன் பின்பு தான் உங்களுக்கு உதவ பிற தெய்வங்கள் உதவ முடியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள் தான் நம் குலத்தை காக்கின்ற குல தெய்வங்கள்.

- Advertisement -

இப்படிப்பட்ட குலதெய்வங்கள் நம் வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்பதை சாதாரணமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம் உங்கள் வீட்டில் வறுமை, பண கஷ்டம், இது போன்ற சிக்கல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இல்லை என்பதை தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் தான் நீங்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செய்து கண்டிப்பாக வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி நீங்கள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்து முடித்தது வரும் பொழுது உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் உங்களுடன் வந்து இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் வரும் பொழுது பின் வரும் அறிகுறிகளை வைத்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தீபம்

முதலில் பூஜை அறை தீபம் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்து விளக்கேற்றும் போது அந்த விளக்கு எப்போதும் போல் இல்லாமல் மிகவும் பிரகாசமாகவும், கொழுந்து விட்டு உயர உயர ஏரிகிறது என்றாள் அந்த தீபத்தை வளர்த்துக் கொண்டிருப்பதை உங்கள் குலதெய்வமாகத்தான் இருக்கும். அதையும் தாண்டி அந்த தீபமானது வெள்ளை நிறத்திலோ அல்லது வயலட் நிறத்தில் எரிகிறது என்றாலும் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பல்லி சத்தமிடுதல்

இரண்டாவதாக பல்லி சத்தமிடுதல் ஆம் உங்கள் வீட்டில் பூஜை அறையில் பல்லிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இறை சக்தி அதாவது தெய்வ சக்தி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். இறை சக்திகள் அதிகமாக இருக்கும் இடத்தில் பல்லிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் உங்கள் வீட்டில் உங்கள் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்றால் பல்லி சத்தமிட்டு கொண்டே இருக்கும் இதுவே உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதை காட்டி கொடுத்து விடும். ஏன் நீங்கள் ஜோதிடம் அல்லது சாமியார்கள் யாரையாவது பார்க்கப் போனால் கூட அவர்கள் உங்கள் வீட்டில் பல்லி சத்தம் போடுகிறிதா ? பல்லி நடமாட்டம் பூஜையறையிலன இருக்கிறதா இது போன்ற கேள்விகளை உங்களிடம் கேட்பார்கள். அந்த அளவிற்கு ஆன்மீகத்துடன் தொடர்புடையது பல்லி.

-விளம்பரம்-

சந்தனத்தின் நறுமணம்

மூன்றாவதாக திடீர் நறுமனம் வருதல் ஆம், வீட்டில் சந்தனத்தின் நறுமணம், விபூதியி நறுமணம், பூவின் வாசம் இந்த வாசனைகள் எல்லாம் உங்கள் வீட்டில் தீடிர் என்று வருகிறது என்றால் உங்கள் வீட்டில் குல தெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். கோவிலில் உங்கள் குலதெய்வத்திற்கு செய்யப்படும் சந்தன அபிஷேகம், வீபூதி அபிஷேகம் என்று இப்படி செய்வது ? அவர்களுக்கு அணிவிக்கும் மாலைகள் இதுபோன்று இந்த அபிஷேக எல்லாம் முடிந்து உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வரும்போது உங்கள் குலதெய்வத்தின் கூடவே இது போன்ற வாசனைகளும் வரும் இதை நம்மில் பல நபர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். இதுவும் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஒரு அறிகுறிதான்.

சுருட்டு வாசனை

மேலும் சில குடும்பத்தினருக்கு கருப்பன், அய்யனார், முனியசாமி போன்ற ஆண் தெய்வங்கள் குலதெய்வமாக இருக்கும் இந்த தெய்வங்களுக்கெல்லாம் நாம் சுருட்டை ஒரு பிரசாதமாக வைத்து வழிபடுவோம் அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று சுருட்டு வாசனை வருவதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உங்கள் குல தெய்வத்தின் நடமாட்டம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையாக நம்பலாம்.

கோவில் எலுமிச்சை

நான்காவதாக எலுமிச்சை பழம் ஆம் நீங்கள் எப்போது கோவில்களுக்கு சென்று வரும்போது அங்கு கொடுக்கப்படும் எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டில் நிலை வாசலில் அல்லது பூஜை அறையிலும் வைத்திருப்பீர்கள். அப்படி வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் நாட்கள் செல்ல செல்ல சுருங்கி காய்ந்து போகிறது என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதே எலுமிச்சம் பழம் அழுகிப்போகின்ற நிலைக்கு வரும்போது உங்கள் வீட்டில் இறை சக்தி என்பது துளியும் இல்லை துர்சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை அதை உணர்த்தும்.

-விளம்பரம்-

காகம் கரைதல்

ஐந்தாவது காகம் ஆம் காகமும் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும் பொதுவாக உங்கள் வீட்டு அருகில் இருக்கும் காகத்திற்கு நீங்கள் எப்போதும் போல் சாப்பாடு வைப்பீர்கள் ஆனால் அந்த காகம் அந்த உணலை சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் இல்லாமல் திடீரென்று உங்கள் வீட்டை சுற்றி சுற்றி சென்று கரைந்து கொண்டே இருக்கும் பொழுது அது ஒன்றை உங்களுக்கு தெளிவாக உணர்த்தும் ஒன்று உங்கள் வீட்டிற்கு குல தெய்வம் அல்லது உங்கள் உறவினர்கள் யாராவது வீட்டுக்கு வருகிறார்கள் என்பதை உணர்த்தும்.

குலதெய்வம் உத்தரவு

ஆறாவதாக அறிகுறி சில சமயங்களில் நீங்கள் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் குறித்தோ அல்லது நல்ல காரியங்கள் குறித்தோ பேசும்போது அல்லது இந்த நல்ல காரியங்கள் குறித்து உங்கள் குல தெய்வங்களிடம் நீங்கள் பிராத்தனை வைக்கும் போது உங்கள் குலதெய்வங்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க நோக்கத்தில் ஒரு சில விஷயங்களை செய்வார்கள் இதில் சிலருக்கு தெரிந்த பொதுவான விஷயம் உங்கள் குலதெய்வத்தின் மேல் வைக்கின்ற பூ கீழே விழும் அல்லது எலுமிச்சம்பழம் கீழே விழும் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்கும். ஆனால் இதையும் தாண்டி சில நிகழ்வுகள் நடக்கும் ஆம் நீங்கள் சுப காரியங்கள் குறித்து பேசும் பொழுது அல்லது பிரார்த்தனை செய்யும் போது நீங்கள் அதைப் பேசிய ஒரு சில மணி நேரத்திற்குள்ளாகவே உங்களுக்கு தெரிந்தவர்கள் யார் மூலமாக கோவிலில் இருந்து பூ கொண்டு வந்திருக்கிறேன் பிரசாதம் கொண்டு வந்திருக்கிறேன் என்று வருவார்கள் இது உங்கள் குல தெய்வம் தான் செய்யும், அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிப்பதை இப்படி எல்லாம் கூட நமக்கு உணர்த்துவார்கள்.