வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை இந்த மாதிரி ஒரு தடவை பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு பாருங்க!!

பொதுவா இப்போ எல்லாருமே காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசை தான் செய்றோம். இந்த அவசரமான உலகத்துல எல்லாருமே டக்கு டக்குனு வேலையே முடிக்கணும் முடிவு தான் பார்ப்போம் அதனால மாவு அரைச்சு வச்சுக்கிட்டு அதுல இட்லி தோசை தான் பெரும்பாலும் எல்லார் வீட்லயும் செய்வோம். ஆனா வீட்ல இருக்குற குழ

By Prem Kumar · 21/6/2025

பொதுவா இப்போ எல்லாருமே காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசை தான் செய்றோம். இந்த அவசரமான உலகத்துல எல்லாருமே டக்கு டக்குனு வேலையே முடிக்கணும் முடிவு தான் பார்ப்போம் அதனால மாவு அரைச்சு வச்சுக்கிட்டு அதுல இட்லி தோசை தான் பெரும்பாலும் எல்லார் வீட்லயும் செய்வோம். ஆனா வீட்ல இருக்குற குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கொஞ்சம் ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் தான் இப்ப இருக்குற காலகட்டத்தில் எல்லாருமே நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். அதுக்கு நம்ம அதிகமா காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளணும். அந்த வகையில இடியாப்பம் இட்லி கொழுக்கட்டை இது எல்லாமே உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது. இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான ஆவியில் வேகவைத்து செய்யக்கூடிய அவல் கொழுக்கட்டை செய்யப்போகிறோம். அதுவும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப் போறோம் இப்போ நம்ம செய்ய போற இந்த கொழுக்கட்டையில் கேரட் பீன்ஸ் வெங்காயம் சேர்த்து இருக்கிறோம். உங்களுக்கு தேவைப்பட்டால் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் பன்னீர் சேர்த்து கூட செய்யலாம்.

இதுக்கு எந்த சைடு டிஷ்ஷூம் தேவைப்படாது. உங்களுக்கு தேவைப்பட்டால் தக்காளி சட்னி வச்சு சாப்பிட்டுக்கோங்க செம டேஸ்டா இருக்கும். காலைல பிரேக் பாஸ்ட்க்கு குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுத்த அனுப்புங்க ரொம்ப ரொம்ப ஈஸியா இதை செஞ்சு முடிச்சிடலாம் ஒரு 20 நிமிஷத்துல இதை செஞ்சுடலாம் ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி தான். அதே நேரத்தில் ரொம்ப ஆரோக்கியமான ரெசிபியும் கூட. இதுக்கு நீங்க வெள்ளை அவல் பயன்படுத்தணும் அதுவும் கெட்டியான அவல் தான் பயன்படுத்தணும். இப்ப வாங்க இந்த ருசியான வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full