பொதுவா இப்போ எல்லாருமே காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசை தான் செய்றோம். இந்த அவசரமான உலகத்துல எல்லாருமே டக்கு டக்குனு வேலையே முடிக்கணும் முடிவு தான் பார்ப்போம் அதனால மாவு அரைச்சு வச்சுக்கிட்டு அதுல இட்லி தோசை தான் பெரும்பாலும் எல்லார் வீட்லயும் செய்வோம். ஆனா வீட்ல இருக்குற குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கொஞ்சம் ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் தான் இப்ப இருக்குற காலகட்டத்தில் எல்லாருமே நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். அதுக்கு நம்ம அதிகமா காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளணும். அந்த வகையில இடியாப்பம் இட்லி கொழுக்கட்டை இது எல்லாமே உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது. இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான ஆவியில் வேகவைத்து செய்யக்கூடிய அவல் கொழுக்கட்டை செய்யப்போகிறோம். அதுவும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப் போறோம் இப்போ நம்ம செய்ய போற இந்த கொழுக்கட்டையில் கேரட் பீன்ஸ் வெங்காயம் சேர்த்து இருக்கிறோம். உங்களுக்கு தேவைப்பட்டால் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் பன்னீர் சேர்த்து கூட செய்யலாம்.
இதுக்கு எந்த சைடு டிஷ்ஷூம் தேவைப்படாது. உங்களுக்கு தேவைப்பட்டால் தக்காளி சட்னி வச்சு சாப்பிட்டுக்கோங்க செம டேஸ்டா இருக்கும். காலைல பிரேக் பாஸ்ட்க்கு குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுத்த அனுப்புங்க ரொம்ப ரொம்ப ஈஸியா இதை செஞ்சு முடிச்சிடலாம் ஒரு 20 நிமிஷத்துல இதை செஞ்சுடலாம் ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி தான். அதே நேரத்தில் ரொம்ப ஆரோக்கியமான ரெசிபியும் கூட. இதுக்கு நீங்க வெள்ளை அவல் பயன்படுத்தணும் அதுவும் கெட்டியான அவல் தான் பயன்படுத்தணும். இப்ப வாங்க இந்த ருசியான வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை | Veg Aval Kozhukattai Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1 கப் அவல்
- 2 கேரட்
- 10 பீன்ஸ்
- 1 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 2 பச்சை மிளகாய்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- கெட்டியான அவலை தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை கடலைப்பருப்பு பெருங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- துருவிய கேரட் நறுக்கிய பீன்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி ஊற வைத்துள்ள அவலில் சேர்த்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!