Advertisement
காலை உணவு

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு உங்களுடைய ஆரோக்கியமும் வலுவாக அமையும். அந்த வகையில் தினமும் ஒரே வகையான இட்லி தோசையை சுட்டு போரடித்து போன உங்களுக்கு அரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் வெறும் பச்சை பயறை கொண்டு செய்யப்படும் இந்த பச்சை பயறு இட்லி ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். அலாதியான சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது இந்த பச்சை பயறு இட்லி.

உடல் பருமன் அதிகமாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் எடை குறையவில்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த இட்லியை முயற்சி செய்யலாம். அதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று சின்ன சின்ன காய்ச்சல், இரும்பல், தலைவலி, வந்தால் கூட தாங்காமல் அவதிப்படுகிறார்கள்.

Advertisement

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து என்பது கிடைப்பதே கிடையாது. ஆரோக்கியத்தோடு சேர்ந்த அழகை பெற வேண்டும் என்றாலும், இந்த வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். எப்போதும் அரிசியில் தானே இட்லி செய்து சாப்பிடுகின்றோம். அதைவிட பல மடங்கு சத்து நிறைந்த வெஜிடபிள் பச்சை பயிறு இட்லி ரெசிபி இதோ உங்களுக்காக.

வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி | Vegetable Green Gram Idly

Print Recipe
உடல் பருமன் அதிகமாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் எடை குறையவில்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று
Advertisement
நாட்கள் இந்த இட்லியை முயற்சிசெய்யலாம். அதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று சின்ன சின்ன காய்ச்சல்,இரும்பல், தலைவலி, வந்தால் கூட தாங்காமல் அவதிப்படுகிறார்கள். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துஎன்பது கிடைப்பதே கிடையாது. ஆரோக்கியத்தோடு சேர்ந்த அழகை பெற வேண்டும் என்றாலும், இந்தவெஜிடபிள் பாசிப் பயறு இட்லி ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். எப்போதும் அரிசியில்தானே இட்லி செய்து
Advertisement
சாப்பிடுகின்றோம். அதைவிட பல மடங்கு சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைபயிறு இட்லி ரெசிபி இதோ உங்களுக்காக.
Course Breakfast
Cuisine tamil nadu
Keyword Vegetable Green Gram Idly
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 188

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் முளை கட்டிய பாசிப்பயறு
  • 2 டேபிள் ஸ்பூன் புழுங்கல் அரிசி
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய காய்கறிகள்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்துமல்லி
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • அரிசி,பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும், ஊறியதும்பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • இதில் காய்கறிகள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றிப் பரிமாறவும்.
  • எண்ணெய்சேர்க்காத உணவாதலால் இதயத்துக்கு நிஜமாகவே இதமானது. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றுவதற்கு பதிலாக, துணி போட்டு இந்த இட்லி செய்து தந்தால் இன்னும் நல்லது
  • பயறைத் தோலுடன் அரைத்துச் செய்வதால் அதிக அளவு நார்ச்சத்தும் சத்தும் கிடைக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 188kcal | Carbohydrates: 14.3g | Protein: 2.9g | Fat: 3.8g | Sodium: 542.7mg | Fiber: 2.8g | Vitamin C: 13.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

3 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

21 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago