காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு உங்களுடைய ஆரோக்கியமும் வலுவாக அமையும். அந்த வகையில் தினமும் ஒரே வகையான இட்லி தோசையை சுட்டு போரடித்து போன உங்களுக்கு அரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் வெறும் பச்சை பயறை கொண்டு செய்யப்படும் இந்த பச்சை பயறு இட்லி ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். அலாதியான சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது இந்த பச்சை பயறு இட்லி.

-விளம்பரம்-

உடல் பருமன் அதிகமாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் எடை குறையவில்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த இட்லியை முயற்சி செய்யலாம். அதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று சின்ன சின்ன காய்ச்சல், இரும்பல், தலைவலி, வந்தால் கூட தாங்காமல் அவதிப்படுகிறார்கள்.

- Advertisement -

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து என்பது கிடைப்பதே கிடையாது. ஆரோக்கியத்தோடு சேர்ந்த அழகை பெற வேண்டும் என்றாலும், இந்த வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். எப்போதும் அரிசியில் தானே இட்லி செய்து சாப்பிடுகின்றோம். அதைவிட பல மடங்கு சத்து நிறைந்த வெஜிடபிள் பச்சை பயிறு இட்லி ரெசிபி இதோ உங்களுக்காக.

Print
5 from 1 vote

வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி | Vegetable Green Gram Idly

உடல் பருமன் அதிகமாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் எடை குறையவில்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த இட்லியை முயற்சிசெய்யலாம். அதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று சின்ன சின்ன காய்ச்சல்,இரும்பல், தலைவலி, வந்தால் கூட தாங்காமல் அவதிப்படுகிறார்கள். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துஎன்பது கிடைப்பதே கிடையாது. ஆரோக்கியத்தோடு சேர்ந்த அழகை பெற வேண்டும் என்றாலும், இந்தவெஜிடபிள் பாசிப் பயறு இட்லி ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். எப்போதும் அரிசியில்தானே இட்லி செய்து சாப்பிடுகின்றோம். அதைவிட பல மடங்கு சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைபயிறு இட்லி ரெசிபி இதோ உங்களுக்காக.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Vegetable Green Gram Idly
Yield: 4
Calories: 188kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் முளை கட்டிய பாசிப்பயறு
  • 2 டேபிள் ஸ்பூன் புழுங்கல் அரிசி
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய காய்கறிகள்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்துமல்லி
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • அரிசி,பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும், ஊறியதும்பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • இதில் காய்கறிகள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றிப் பரிமாறவும்.
  • எண்ணெய்சேர்க்காத உணவாதலால் இதயத்துக்கு நிஜமாகவே இதமானது. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றுவதற்கு பதிலாக, துணி போட்டு இந்த இட்லி செய்து தந்தால் இன்னும் நல்லது
  • பயறைத் தோலுடன் அரைத்துச் செய்வதால் அதிக அளவு நார்ச்சத்தும் சத்தும் கிடைக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 188kcal | Carbohydrates: 14.3g | Protein: 2.9g | Fat: 3.8g | Sodium: 542.7mg | Fiber: 2.8g | Vitamin C: 13.4mg