Home சைவம் பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

வாரத்துக்கு மூணு தடவையாவது நம்ம கீரை சாப்பிட்டால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் டெய்லி கூட நம்ம கீரை சாப்பிடலாம் அது நம்ம உடம்புக்கு அவ்வளவு நன்மைகளை கொடுக்கக் கூடியது. இந்த கீரை வச்சு கீரை பொரியல் கீரை கூட்டு கீரை சூப் என நிறைய செஞ்சு சாப்பிடலாம் கீரைகளில் நிறைய வகைகள் இருக்கு அதுல ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு விதமான குணங்களை கொண்டிருக்கும் ஒவ்வொரு கீரையும் சாப்பிடும் போது நம்ம உடம்புக்கு ஒவ்வொரு விதமான நன்மைகள் கிடைக்கும்.

-விளம்பரம்-

அப்படின்னே சொல்லலாம் நமக்கு அதிகமாக கிடைக்கக்கூடிய கீரைகள் அப்படின்னு பார்த்தா அரைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை முருங்கைக்கீரை மிளகு தக்காளி கீரை பாலக்கீரை வல்லாரைக் கீரை இதுதான் ஆனா இன்னைக்கு நம்ம பாலக்கீரை வச்சு ஒரு சூப்பரான கூட்டு தான் செய்யப் போறோம் இந்த பாலக்கீரை கூட்டு செய்து அதை சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.

கூடவே அப்பளமும் வறுத்துக்கிட்டா ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும் அது மட்டும் இல்லாம காரக்குழம்பு வச்சீங்கன்னா இந்த கூட்ட சைடு டிஷ்ஷா வெச்சு சாப்பிட்டு பாருங்க செம சூப்பரா இருக்கும் அதோட இந்த பாலக்கீரையில் நிறைய சத்துக்களும் இருக்கு ஆரோக்கியம் நிறைந்த இந்த பாலக் கீரை வச்சு நம்ம பாலக்கீரை சூப் பொரியல் பாலக் பன்னீர் பால சப்பாத்தி அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம் அதுலயும் நீங்க இந்த பாலக்கீரை கூட்டு செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் ரொம்ப சிம்பிளா இந்த பாலக்கீரை கூட்டு எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

Print
No ratings yet

பாலக் கீரை கூட்டு | Palak Keerai Kootu Recipe In Tamil

வாரத்துக்கு மூணு தடவையாவது நம்ம கீரை சாப்பிட்டால்நம் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் டெய்லிகூட நம்ம கீரை சாப்பிடலாம் அது நம்ம உடம்புக்கு அவ்வளவு நன்மைகளை கொடுக்கக் கூடியது.இந்த கீரை வச்சு கீரை பொரியல் கீரை கூட்டு கீரை சூப் என நிறைய செஞ்சு சாப்பிடலாம் கீரைகளில்நிறைய வகைகள் இருக்கு.கூடவே அப்பளமும் வறுத்துக்கிட்டா ரொம்ப டேஸ்ட்டாவேஇருக்கும் அது மட்டும் இல்லாம காரக்குழம்பு வச்சீங்கன்னா இந்த கூட்ட சைடு டிஷ்ஷா வெச்சுசாப்பிட்டு பாருங்க செம சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Palak keerai Kootu
Yield: 3
Calories: 19kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு பாலக்கீரை
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முதலில் துவரம் பருப்பை கழுவி வேக வைக்கவும்
  • முக்கால் பதத்திற்கு பருப்பு வெந்தவுடன் கீரையை சேர்த்து அதனுடன் தக்காளியை நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்
  • சீரகத்தையும் சேர்த்து கீரை வேக ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  • நிறைய தண்ணீர் சேர்க்கக்கூடாது கீரை நன்றாக வெந்தவுடன் கீரையை பருப்புடன் சேர்த்து நன்றாக மசித்துவைக்கவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்துகீரையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கிளறி இறக்கினால் சுவையான பாலக் கீரைகூட்டு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 19kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.8g | Sodium: 39mg | Potassium: 233mg | Vitamin C: 14.8mg

இதையும் படியுங்கள் : புளிச்சக்கீரை வைத்து ஒரு தடவை இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி செஞ்சு பாருங்க!