புளிச்சக்கீரை வைத்து ஒரு தடவை இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி செஞ்சு பாருங்க!

- Advertisement -

காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும் இன்னைக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல நீங்க கோங்குரா பச்சடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அதுக்கு அடிக்ட் ஆயிடுவீங்க அந்த அளவுக்கு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். நல்ல காரசாரமா இந்த கோங்குரா பச்சடி சென்று சுட சுட சாதத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா அதோட டேஸ்ட் அவ்வளவு அருமையா இருக்கும்.

-விளம்பரம்-

ஆந்திராவுல எந்த ஹோட்டலுக்கு போனாலும் இந்த கோங்குரா பச்சடி தான் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஆனா இந்த கோங்குரா பச்சடி சாப்பிடுவதற்காக நம்மளால ஆங்கில வரைக்கும் போக முடியாது இல்லையா அதனால நம்ம வீட்டிலேயே இந்த சூப்பரான கோங்குரா பச்சடி ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு சாப்பிடலாம்.

- Advertisement -

கீரை வகைகள்ல புளிச்ச கீரை நிறைய பேரோட பேவரட்டா இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த கோங்குரா பச்சடி ரொம்பவே பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
3 from 1 vote

கோங்குரா பச்சடி | Gongura Pachadi Recipe In Tamil

காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும் இன்னைக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல நீங்க கோங்குரா பச்சடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அதுக்கு அடிக்ட் ஆயிடுவீங்க அந்த அளவுக்கு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். நல்ல காரசாரமா இந்த கோங்குரா பச்சடி சென்று சுட சுட சாதத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா அதோட டேஸ்ட் அவ்வளவு அருமையா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Gongura Pachadi
Yield: 4
Calories: 318kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு புளிச்சக்கீரை
  • 10 காய்ந்தமிளகாய்
  • 1 கட்டி பெருங்காயம்
  • 1 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள்ஸ்பூன் மல்லிவிதைகள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 6 பல் பூண்டு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் உளுந்து மல்லி விதைகள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • மறுபடியும் அதே கடாயில் புளிச்ச கீரையை சேர்த்து நன்றாக தொக்கு பதத்திற்கு வரும் வரையில் வதக்கிக் கொள்ளவும்
  • அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மறுபடியும் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்
  • பேசாதனுடன் தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி எடுத்தால் சுவையான கோங்குரா பச்சடி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 318kcal | Carbohydrates: 30.7g | Protein: 20g | Fat: 1g | Vitamin C: 59mg