புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உண்டு. அதிலும் இந்தப் புலாவ் வகைகளை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவது வழக்கம். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் தக்காளி, கேரட், பட்டாணி போன்ற புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. குறைந்த நேரத்தில் மிக எளிதாக சமைக்கக் கூடிய ஒரு அட்டகாசமான உணவு வகை இவை.
அதனால் திடீரென ஒரு வித்தியாசமான உணவு சமைத்து உண்ண வேண்டும் என்று தோன்றினால் இதை செய்து சுவைக்கலாம். பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவாக இந்த கேரட் புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். புலாவ் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
கேரட் புலாவ் | Carrot Pulao Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 2 கப் பாசுமதி அரிசி
- 3 கேரட்
- 2 கப் தேங்காய் பால்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 4 பச்சை மிளகாய்
- 1 கப் புதினா, கொத்தமல்லி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் சீரகம்
- 10 முந்திரி
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் அரிசியை நன்கு அலசி விட்டு ஊற வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புதினா இலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அதன்பிறகு தக்காளி சேர்த்து வதங்கியதும் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கேரட்டை சேர்த்து வதக்கி ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து கலந்து விடவும்.
- பின் தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
- பின் விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை மற்றும் நெய் விட்டு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் புலாவ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான தக்காளி புலாவ் இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிப்பார்கள்!