வெந்தயக்கீரை மீன் குழம்பு இப்படி செய்து சுட சட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

வெந்தயக்கீரை மீன் குழம்பு வெந்தயக்கீரையின் கசப்பத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு வஞ்சிர மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்!

Print
No ratings yet

வெந்தயக்கீரை மீன் குழம்பு | VendayaKeerai Meen Kulambu Recipe in Tamil

வெந்தயக்கீரையின் கசப்பத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்!
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: மீன் குழம்பு
Yield: 4 People
Calories: 206kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/ கிலோ வஞ்சிரமீன்
  • 200 கிராம் வெங்காயம்
  • 350 கிராம் தக்காளி
  • 50 கிராம் தக்காளி பே5ஸ்ட்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/ டீஸ்பூன் சீரகத்தூள் தலா
  • உப்பு ருசிக்கு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கட்டு வெந்தயக்கீரை
  • புளி சிறிய லெமன் சைஸ்

தாளிப்பதற்கு

  • 3 டேபிள் ஸ்பூன நல்லெண்ணை
  • 1 டேபிள் ஸ்பூன கடுகு, சீரகம், சோம்பு, மிளகு
  • 6 பல் பூண்டு
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 4 ஸ்பூன் தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை
  • 1/ கைப்பிடி கொத்துமல்லி தழை

செய்முறை

  • மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
  • வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  • வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  • தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
  • தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
  • வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
  • அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
  • 5நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.
  • குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்.

Nutrition

Serving: 500g | Calories: 206kcal | Protein: 22g | Fat: 12g | Saturated Fat: 2.5g | Cholesterol: 63mg | Sodium: 61mg | Potassium: 384mg | Vitamin C: 56mg | Calcium: 1mg