குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு செய்ய வேண்டிய விநாயகர் பரிகாரம்!!
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது படிப்பு தான். படிப்பு இருந்தால் போதும் நமக்கு தேவையான செல்வங்கள் அனைத்தும் நமக்கு வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் ஒழுக்கமாக வாழவும் கற்றுக் கொடுக்கும் அனுபவ அறிவையும் கற்றுக் கொடுக்கும் மொத்தத்தில் படிப்பு ஒன்ற
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது படிப்பு தான். படிப்பு இருந்தால் போதும் நமக்கு தேவையான செல்வங்கள் அனைத்தும் நமக்கு வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் ஒழுக்கமாக வாழவும் கற்றுக் கொடுக்கும் அனுபவ அறிவையும் கற்றுக் கொடுக்கும் மொத்தத்தில் படிப்பு ஒன்று தான் அனைவருக்குமே ஒரு மிகப்பெரிய சொத்து என்றே கூறலாம். குழந்தைகள் அனைத்து சூழலிலும் வாழ்வதற்கு உகந்தது கல்வி மட்டும் தான் அத்தகைய கல்வியை குழந்தைகள் நன்றாக கற்பதற்கு செய்ய வேண்டிய ஒரு விநாயகர் பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.
கல்வி
அனைத்து பிள்ளைகளும் கல்வியில் ஆர்வம் காட்டி நன்றாக படிக்க மாட்டார்கள் ஒரு சில குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும். ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்காது அதனால் உங்கள் குழந்தைகளும் கல்வி ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காகவும் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களையும் முன்னே கொண்டு வருவதற்காகவும் இந்த வழிபாடு உதவும்.
விநாயகர் பரிகாரம்
குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் புதன்கிழமை காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் வீட்டிற்கு அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று ஐந்து மண் அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்துவிட்டு தோப்புக்கரணம் போட்டு மூன்று முறை விநாயகரை வலம் வந்து பிரார்த்தனை வைத்தால் படிக்காத குழந்தைகளும் கூட படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
பரிகாரத்தின் பலன்கள்
படிப்பில் பின்தங்கி இருக்கக்கூடிய குழந்தைகள் படிப்பை வராத குழந்தைகள் நினைவாற்றலை அதிகரிக்க என அனைத்திற்கும் மேய்ந்த வழிபாடு உகந்ததாக இருக்கும். ஒரு சில குழந்தைகள் படித்ததை மறந்த விடுவார்கள் அத்தகைய குழந்தைகளுக்கு படித்தது ஞாபகம் இருப்பதற்கும் குழந்தைகளையும் சேர்த்து புதன்கிழமை என்று விநாயகர் கோவிலுக்கு கூட்டிச் செல்லலாம் விநாயகரை வழிபட சொல்லலாம். சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரிய குழந்தைகளாக இருந்தாலும் சரி அனைவருக்குமே இந்த பரிகாரம் நிச்சயமாக நல்ல பலனை கொடுக்கும். சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்களே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இதனையும் படியுங்கள் : குடும்ப சண்டை விலக ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்!!