வீட்டில் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் இது ஒரு காரணத்திற்காக வரக்கூடிய சண்டை சில சமயங்களில் பெரிய சண்டையாக கூட மாறிவிடும். அந்த சமயத்தில் வீட்டில் வாக்குவாதங்கள் மனஸ்தாபங்கள் மனக்கசப்புகள் ஏற்படும் சின்னதாக வரும் சண்டையால் கூட குடும்பங்கள் பிரியலாம். எதிர்பார்க்காமல் வரக்கூடிய சண்டைகள் மன நிம்மதியை கெடுக்கும். அதற்கு காரணம் வீட்டில் உள்ள கெட்ட சக்தியின் காரணம் தான். கண்திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அனைத்தும் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இறைவழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்தால் சண்டைகள் விலகும்.

உக்கிர தெய்வங்கள்
ஞாயிற்றுக்கிழமை வழிபடக்கூடிய தெய்வங்கள் உக்கிர தெய்வங்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் நிறைய இருக்கும் அதில் உக்கிர தெய்வங்களாக இருக்கக்கூடிய நரசிம்மர் பரமேஸ்வரி காளி வராகி கருப்பசாமி போன்ற தெய்வங்களில் உங்களுடைய இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்து ஞாயிற்றுக்கிழமை என்று பரிகாரத்தை செய்ய வேண்டும். வாரவாரம் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம் செய்யும் முறை
ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அதில் பச்சை கற்பூரம் கருகம்புல் வெட்டிவேர் பொடி அனைத்தையும் சேர்த்து கரைத்து வீட்டில் உள்ள இடத்தை துடைக்க வேண்டும். வீட்டில் உள்ள ஒரு இடம் விடாமல் அனைத்து இடங்களிலும் துடைக்க வேண்டும் கட்டில் சோபா வாஷிங் மெஷின் பிரிட்ஜ் கிரைண்டர் என அனைத்திற்கும் அடியில் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ராகு கால நேரத்தில் வரவேற்பு அருகில் வீட்டில் அகல் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
ராகுகால அகல்விளக்கு
நண்பனுக்கு ஏற்றி வைத்துவிட்டு உக்கிர தெய்வத்தினுடைய நாமத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும் நீங்கள் செல்லக்கூடிய அந்த பெயர் அந்த தீபச்சுடரில் அமர்ந்து அந்த சூட்டில் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் அழித்துவிடும்.
பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்
ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகு கால நேரம் அந்த நேரத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் போது இஷ்ட தெய்வத்துடைய நாமத்தை உச்சரித்துக் கொண்டே வீட்டில் சண்டை வரக்கூடாது என்று முழு மனதோடு நினைக்க வேண்டும். பிரார்த்தனை செய்துவிட்டு பரிகாரத்தை முடித்துக் கொள்ளுங்கள். முழு நம்பிக்கையோடு தொடர்ந்து ஒன்பது வாரம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளை தீர்க்க செய்ய வேண்டிய வழிபாடு!


