பணமும் நகையும் சேர்வதற்கு ஜாதிக்காயை பயன்படுத்த வேண்டிய முறை!

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பணத்தின் மீதும் தங்கத்தின் மீதும் அதிகமான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாக பணத்தையும் நகையையும் சேமிப்பதற்கு நாம் ஓடிக்கொண்டே இருப்போம். பணமாக கையில் வைத்திருக்க முடியாது என்பதால் அதனை தங்கமாக மாற்றி ஒரு சிலர் வைத்துக் கொள்வார்கள். ஒரு

By ·

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பணத்தின் மீதும் தங்கத்தின் மீதும் அதிகமான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாக பணத்தையும் நகையையும் சேமிப்பதற்கு நாம் ஓடிக்கொண்டே இருப்போம். பணமாக கையில் வைத்திருக்க முடியாது என்பதால் அதனை தங்கமாக மாற்றி ஒரு சிலர் வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் தங்கமும் பணமும் செய்வதற்கு பலவிதமான பரிகாரங்களையும் செய்வார்கள் அந்த வகையில் ஜாதிக்காயை பயன்படுத்தி நகையையும் பணத்தையும் எப்படி அதிகமாக சேர்ப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

வசிய பொருள்

அன்றைய காலத்தில் உள்ள நம் முன்னோர்கள் அனைவரும் தன வசியத்திற்காகவும் பண வசியத்திற்காகவும் வீட்டில் உள்ள பொருட்களை தான் பயன்படுத்தி வந்தார்கள் அந்த வகையில் நாமும் வசியத்திற்காக வீட்டில் பயன்படுத்தக்கூடிய ஜாதிக்காயை தான் பயன்படுத்த போகிறோம். ஜாதிக்காயை நம் முகத்திற்கு பயன்படுத்தும் போது முகப்பொலிவு ஏற்படும் அத்தகைய ஜாதிக்காயை பணத்தோடும் நகையோடும் சேர்த்து வைக்கும் போது பிரகாசம் ஏற்பட்ட தங்கமும் பணமும் அதிகமாக ஈர்க்கப்படும்.

பரிகாரம் செய்யும் முறை

ஒரு அடி அகலம் மற்றும் நீளம் கொண்ட ஒரு மஞ்சள் நிற துணியை பன்னிரு நனைத்து காய வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று ஜாதிக்காயையும் பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் சேர்த்து கழுவி எடுக்க வேண்டும். பிறகு அந்த மஞ்சள் நிற துணியில் ஜாதிக்காயை சேர்த்து அதனுடன் ஏதாவது ஒரு சிறிய தங்கத்தை வைத்து முடிச்சாக கட்டி அதனை நாம் பணம் நகை வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

இந்த பரிகாரத்தை எந்த நாள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பணத்தின் மீது ஒருவகையான ஈர்ப்பு ஏற்பட்டு தங்க நகைகளும் பணமும் அதிகமாகவே சேரும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஜாதிக்காய்களை மாற்ற வேண்டும். பழைய ஜாதிக்காய்களை தூக்கி போடாமல் முக அழகிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை நிச்சயமாக செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீண் செலவு ஆகாமல் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும்!

Recipes AMP · Quick view
View full