உங்களின் குல தெய்வ‌ சாபம் நீங்க இந்த ஒரு ரூபாய்‌ நாணயத்தை மட்டும் வீட்டு வாசலில் கட்டி விடுங்கள்!

ஒரு கஷ்டம் வருகின்றபோது மட்டுமே பெரும்பாலானோர் தெய்வத்திடம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தங்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை, திருமணம் போன்றவை அமையாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு தங்கள் குலதெய்வம் பற்றிய நினைவு வருகின்றது. குலதெய்வத்திற்கு இதற்கு முன் தாங்கள் வேண்டியபடி நேர

By ·

ஒரு கஷ்டம் வருகின்றபோது மட்டுமே பெரும்பாலானோர் தெய்வத்திடம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தங்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை, திருமணம் போன்றவை அமையாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு தங்கள் குலதெய்வம் பற்றிய நினைவு வருகின்றது. குலதெய்வத்திற்கு இதற்கு முன் தாங்கள் வேண்டியபடி நேர்த்திக்கடன் முறையாகச் செலுத்தாத காரணத்தாலேயே, தற்போது பல துன்பங்களை அனுபவிக்கின்றார்கள்.

வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும். குல தெய்வ சாபத்திற்கும் பித்ரு சாபத்திற்கும் ஒரு போதும் ஆளாகக் கூடாது. குல தெய்வத்தின் அருளும் பித்ருக்களின் ஆசியும் கிடைக்காவிட்டால் நம்மால் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாது. குல தெய்வ சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

குலதெய்வ வழிபாடு

எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். அப்படித்தான் எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குலதெய்வத்தை தினமும் வணங்கவேண்டும். குலதெய்வக் கோயிலுக்கு மாதத்துக்கு ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும். அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையில் தான் செய்ய வேண்டும். அதனால், திங்கட்கிழமையிலேயே வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு மஞ்சள் தண்ணீர் தெளித்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் விளக்கு ஏற்றி, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்கள் உள்ளங்களில் வைத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்க வேண்டும் என மனதார வேண்டி, இந்த ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

இந்த முடிச்சை உங்கள் வீட்டின் நிலை வாசலில் கட்டி விடுங்கள். பின்னர் ஒரு விளக்கு ஏற்றி அதை வாசலில் வைத்து விடுங்கள். விளக்கு ஏற்றுவிட்டு பின் மனதார வேண்டிக் கொள்ளுங்கள் இப்படி வேண்டுவதன் மூலம் குலதெய்வம் உங்கள் வீட்டில் இல்லை என்றாலும் உங்கள் வீட்டிற்குள் வந்து விடும்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையில் தான் செய்ய வேண்டும், அதுவும் 48 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த மாதிரி நாம் விளக்கு ஏற்றி வழிபடும் பொழுது குலதெய்வம் குத்தம் இருந்தாலும் அது நீங்கி குலதெய்வம் நம் வீட்டிற்குள் வந்து விடும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் சந்திக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும். சுப காரிய தடைகள் நீங்கி வீட்டில் நன்மைகள் நிகழ ஆரம்பிக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்களுடைய பண கஷ்டத்திலிருந்து விடுபட உங்கள் கையில் சிறிது பாதாம் இருந்தால் மட்டுமே போதும்!

Recipes AMP · Quick view
View full