புரட்டாசி முதல் நாள் அன்று வழிபாடு செய்யும் முறை!
ஒரு ஆண்டில் வரக்கூடிய ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்காக நாம் வழிபாடு செய்வோம் அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த மாதம் தான் புரட்டாசி மாதம் 2024வது வருடம் புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி பிறக்கிறது. மேலும் இந்த வருடம் புரட்டாசி ஆரம்பிக்கும் நாள் பௌர்ணமியும் வருவதால் அ
ஒரு ஆண்டில் வரக்கூடிய ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்காக நாம் வழிபாடு செய்வோம் அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த மாதம் தான் புரட்டாசி மாதம் 2024வது வருடம் புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி பிறக்கிறது. மேலும் இந்த வருடம் புரட்டாசி ஆரம்பிக்கும் நாள் பௌர்ணமியும் வருவதால் அந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. அந்த நாள் என்று பெருமாளை நாம் வழிபடுவதன் மூலம் அவருடைய அருளை முழுவதுமாக பரிபூரணமாக பெற முடியும். எனவே பெருமாளை வழிபடக்கூடிய முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வரக்கூடிய தெய்வம் பெருமாள் ஆனால் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மட்டும் உகந்த மாதமாக இல்லாமல், முப்பெரும் தேவர்களை வழிபடக்கூடிய நவராத்திரி திருவிழா நடைபெறும் மாதமாகவும், சிவபெருமானுக்குரிய கேதார கௌரி விரதம் இருக்க கூடிய மாதமாகவும், அம்பிகையை வழிபடக்கூடிய மாதமாகவும் திகழ்கிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த புரட்டாசி மாதத்தில் முதல் நாளில் பெருமாளை வழிபடக்கூடிய முறையை பற்றி பார்க்கலாம்.
பௌர்ணமி
இந்த வருட புரட்டாசி மாதத்தின் முதல் நாள் அன்று பௌர்ணமியும் வருவதால் அந்த நாள் என்று துளசி மாலை வாங்கிக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டு விட்டு வீட்டிற்கு வரும்போது மஞ்சள் தூள் மற்றும் கல்லுப்பு வாங்கி வந்து பூஜையறையில் வைக்கலாம். பிறகு அந்த இரண்டு பொருட்களையும் சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் பெருமாளுடைய அருள் நமக்கு கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடக்கூடிய முறை
மேலும் அந்த நாளன்று வீட்டில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் மஞ்சள் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து பெருமாளுக்கு துளசி மாலையை போட்டு அனைத்து தெய்வங்களையும் பூக்களால் அலங்கரித்து பிறகு ஏதாவது ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். வழிபடும் போது “ஓம் கோவிந்தாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் மிகவும் சிறப்பானது”
பெருமாளுக்குரிய மந்திரம்
இந்த மந்திரத்தை புரட்டாசி முதல் நாள் மட்டுமில்லாமல் புரட்டாசி மாதம் முழுவதுமே உச்சரிக்கலாம். அப்படி இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு கொண்டே உச்சரிக்கலாம். பிறகு வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். நாம் கோவிந்தா என்ற நாமத்தை வீட்டில் ஒலிக்கும் போது வீட்டிற்கு மகாலட்சுமி தேவியாரும் பெருமாளும் சேர்ந்து வருவார்கள். அவர்களுடைய அருளை பரிபூரணமாக நமக்கு கொடுப்பார்கள் நம் வாழ்க்கை செல்வ செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறும். புரட்டாசி முதல் நாள் என்று இந்த ஒரு வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.
இதனையும் படியுங்கள் : புரட்டாசி மாதம் பிறந்தவுடன் ஜாக்பாட் அடிக்க போகும் நான்கு ராசிகள்!!