கிரகங்கள் அனைத்துமே இயங்கிக் கொண்டே இருந்தாலும் இருக்கின்ற ஒன்பது கிரகங்களும் வெவ்வேறு வேகத்தில் இயங்கக்கூடியது எனவே நவகிரகத்தின் பெயர்ச்சி காலம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.. ஒன்பது கிரகங்களிலேயே சனி கிரகம் தான் மிகவும் மந்தமாக நகரக்கூடிய ஒரு கிரகம். செப்டம்பர் 22 ஆம் நாள் அன்று புதனும் வியாழனும் ஒரே நாளில் பெயர்ச்சி அடையப் போகிறார்கள். இதனால் ஒரு சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழும்.
புதன் வியாழன் பெயர்ச்சி
செப்டம்பர் 22ஆம் தேதி என்று அறிவுகாரகர் புதனும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய குருபகவானும் ராசி மாறுகிறார்கள். ஜாதக ரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் புதனின் நிலை வலுவாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது அதைப்போல ஒரு ஜாதகர் குருபலம் பெற்று வராக இருந்தால் அறிவும் அதிர்ஷ்டமும் கிடைத்து நல்ல வாழ்வை வாழ முடியும் இப்படிப்பட்ட குருவும் புதனும் இணைந்து வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளில் இருந்து சீக்கிரத்திலேயே நன்மைகளை அளிப்பார்கள். அப்படிப்பட்ட புதனும் குருவும் ஒரே நாளில் ராசியை மாற்றுவது அனைவருடைய வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நான்கு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:15 மணிக்கு புதன் பகவான் கன்னி ராசிக்கு மாறுகிறார். மாலை 7:14 மணிக்கு குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு மாறுகிறார். ஒரே நாளில் நடக்க போகும் இந்த பயிற்சியால் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி
ஜோதிட ரீதியாக புதன் மற்றும் குருவின் இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல சிறப்பான பலன்கள் கிடைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த வேலை நிறைவை தரும் அந்த வேலைக்கு ஏற்ற அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும் வீட்டில் மன அமைதி நீடித்து மகிழ்ச்சியும் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு ஆன்மீகத்தில் சற்று ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி ராசி
இந்த பெயர்ச்சியால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும் காரியத்தடைகள் நீங்கும் நீண்ட நாட்களாக வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் கன்னி ராசிக்காரர்கள் செய்யும் முதலீட்டிற்கு இரட்டிப்பு பலன்களை வியாழன் கொடுப்பார். திருமணம் ஆனவர்களும் காதலர்களும் தங்களுடைய வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஒரு சில விஷயங்களை மேற்கொள்வார்கள் மொத்தத்தில் கன்னி ராசியினருக்கு இந்த பெயர்ச்சி மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் தடைபட்ட வேலைகள் அனைத்தும் சீக்கிரத்தில் முடிந்து திடீர் பணவரவு கிடைக்கும் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து உறவுகள் மேம்படும்.
மீன ராசி
மீன ராசியினருக்கு இந்த பெயர்ச்சி நல்ல நேரத்தை ஆரம்பிக்க வைக்கும். அறிவை கூர்மையாக்குவது புதன் என்றால் அதிர்ஷ்டத்தை கொடுப்பது வியாழன் எனவே இந்த இருவருடைய ஒரே நாள் பெயர்ச்சியால் மீன ராசியினருக்கு மனம் அமைதி கிடைக்கும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவாக ஒரு முடிவை எடுப்பார்கள். மொத்தத்தில் மீன ராசியினருக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது.
இதனையும் படியுங்கள் : ஆவணி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்