மாலை நேரம் டீ காபியுடன் சாப்பிட ருசியான கோதுமை பக்கோடா இப்படி செஞ்சி பாருங்கள்!
இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியங்களில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பக்கோடா. பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உரு
இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியங்களில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பக்கோடா. பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது கோதுமை பக்கோடா.
மழைக்காலத்தில் சூடான மிருதுவான வெங்காய பக்கோடா சாப்பிடால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. வெங்காய பக்கோடா செய்ய நினைத்து அப்போது வீட்டில் கடலை மாவு இல்லை அல்லது வித்தியாசமான முறையில் பக்கோடா செய்து பார்க்க வேண்டும் எனில் கோதுமை மாவில் ஆனியன் பக்கோடா செய்து பாருங்கள்.
ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். இதை கடையில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான கோதுமை மாவில் பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.