இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியங்களில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பக்கோடா. பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது கோதுமை பக்கோடா.
மழைக்காலத்தில் சூடான மிருதுவான வெங்காய பக்கோடா சாப்பிடால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. வெங்காய பக்கோடா செய்ய நினைத்து அப்போது வீட்டில் கடலை மாவு இல்லை அல்லது வித்தியாசமான முறையில் பக்கோடா செய்து பார்க்க வேண்டும் எனில் கோதுமை மாவில் ஆனியன் பக்கோடா செய்து பாருங்கள்.
ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். இதை கடையில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான கோதுமை மாவில் பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
கோதுமை பக்கோடா | wheat pakoda recipe in tamil
Equipment
- 1 வாணலி
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 300 கி கோதுமை மாவு
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 பெரிய வெங்காயம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சிறிதாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும்.
- கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு, சீரகம், மிளகாய் தூள் சேர்த்து பக்கோடா பதத்திற்க்கு பிசைந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.
- பக்கோடா நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான, மொறு மொறு கோதுமை பக்கோடா தயார்.
- இதனுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.