கடன் பிரச்சனைகள் தீர வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபடுங்க!!

பண பிரச்சனை, கடன் தொல்லை, ஒருவரை நம்பி பணம் அல்லது நகையை கொடுத்து ஏமாறுவது என்பது போன்ற பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர்களே தற்போது அதிகமாக உள்ளனர். கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போ

By ·

பண பிரச்சனை, கடன் தொல்லை, ஒருவரை நம்பி பணம் அல்லது நகையை கொடுத்து ஏமாறுவது என்பது போன்ற பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர்களே தற்போது அதிகமாக உள்ளனர். கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா! இந்த கடன் பிரச்சனைகள் தீருவதற்கு சில எளிய வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தாலே அதிலிருந்து விடுபட முடியும். அப்படி கடன் பிரச்சனை தீர்ந்து, செல்வம் சேருவதற்காக வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய வழிபாட்டை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

கடன் தீர மகாலட்சுமி வழிபாடு 

திருமகள், மலர்மகள், அலைமகள் என பல பெயர்களால் போற்றப்படும் மகாலட்சுமியே செல்வ வளங்கள் அனைத்திற்கும் அதிபதியாக திகழ்கிறாள். மகாலட்சுமி என்பவள் செல்வம், வளம் மற்றும் சந்தோஷத்தை அளிப்பவர். ஜோதிடத்தில், மகாலட்சுமி வழிபாடு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எங்கெல்லாம் லட்சுமி தேவி இருக்கிறாளோ அந்த இடங்களில் துன்பம், வறுமை என்பது இருக்கவே இருக்காது. அதனால் அனைத்து வீடுகளிலும் லட்சுமி தேவியின் வழிபாட்டை அவசியம் செய்வதுண்டு. மகாலட்சுமியின் வழிபாட்டிற்கு ஏற்ற நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. கடன் பிரச்சனைகள் தீரவும், செல்வம் நிலைக்கவும், மேன்மேலும் விருத்தியடையவும் அன்னை லட்சுமியை எப்படி வழிபட வேண்டுமென்று பார்க்கலாம். 

வழிபாட்டு முறை 

இந்த வழிபாடு செய்வதற்கு வெள்ளிக்கிழமை முன் தினமே வீட்டை நன்கு சுத்தம் செய்து விடவும். வெள்ளிக்கிழமை அன்று பூஜையறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தாமரைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்ற பயன்படுத்தும் நெய் நம்முடைய வீட்டிலேயே செய்ததாக இருந்தால் மிகவும் நல்லது. பின் நாம் ஏற்றிய விளக்கில் இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பையும் சேர்க்க வேண்டும். விளக்கு ஏற்றி விட்டு மகாலட்சுமிக்கு முன்பாக 6 வெற்றிலைகளும் 3 கொட்டைப்பாக்குகளும் வைக்க வேண்டும். இந்த வெற்றிலைகளை வட்டமாக வைக்க வேண்டும், நாம் வைக்கும் வெற்றிலையில் இரண்டாவது பெரியதாகவும் ஆறாவது சிறியதாகவும் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு பிடித்த மாதுளை அல்லது ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்தியமாக படைக்கலாம். பூஜை செய்யும் போது லட்சுமி அஷ்டோட்த்திரத்தை சொல்லி மனதார வழிபட‌ வேண்டும். பின் ஆரத்தி காண்பித்து நைவேத்தியத்தை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கவும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உகந்த நாள், அன்று சுக்கிர ஹோரையில் வளர்பிறை நாளில் லட்சுமி தேவியை வணங்கினால் லட்சுமி தேவி மற்றும் சுக்கிரனின் அருளால் நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற்றும்.‌

இதனையும் படியுங்கள் : செல்வத்தை அதிகமாக சேர்க்க மகாலட்சுமி அஷ்டக வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full