ஒருவருடைய வாழ்க்கை இரு கடன் ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அந்த கடனை சரி செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவருக்கு கர்ம வினைகள் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். கர்ம வினைகள் தீருவதற்கு நிறைய வழிபாடு இருந்தாலும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது அந்த வழிபாட்டை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
கர்ம கடன்

ஒருவர் இந்த பிறவியில் கடன் தொல்லையால் கஷ்டப்படுகிறார் என்றால் அவர் முந்தைய பிறவிகள் பலருக்கும் கஷ்டம் கொடுத்து கர்ம வினைகளை சேர்த்துள்ளார் என்று அர்த்தம். கர்ம கடன் ஏற்படுவதற்கு காரணம் சுக்கிர பகவானுடன் கேது பகவானோ அல்லது சனி பகவானோ சேர்ந்திருப்பது தான். அந்த செயற்கையால் தான் இந்த ஜென்மத்தில் கடனால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதை சரி செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாடல் தான் மகாலட்சுமி தேவியாருடைய அஷ்டகம்.
மகாலட்சுமி தேவியின் அஷ்டகம்
மகாலட்சுமி தேவியாருடைய அஷ்டகத்தை வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் படிக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தயாருக்கு முன்பாக 8 அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்து கொள்ள வேண்டும். காமாட்சி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமி அஷ்டகத்தை படிக்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய எட்டு பாடல்களும் நிறைவு பெறும் பொழுது நமோஸ்துதே என்ற வார்த்தை வரும் அந்த வார்த்தையை சொல்லும் போது தீபத்தை எட்டு விளக்குகளிலும் ஏற்றி மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும். பிறகு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
நெய்வேதியம்
மகாலட்சுமி தாயாரை வழிபடும் போது வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நெய்வேதியத்தை வைத்து வழிபட வேண்டும். மேலும் ஒரு சின்ன வெள்ளி கிண்ணம் அல்லது சில்வர் கிண்ணத்தில் சுத்தமான தேனை நெய்வேதியமாக வைத்து, பச்சை கற்பூரத்தால் ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இது கடன் பிரச்சனையை தீர்க்கக் கூடியது செல்வ செழிப்பு ஏற்படும். இந்த பாடல் அகஸ்தியர் மாமுனிவர் அருளிய பாடல் என்பதால் மகாலட்சுமி தாயார் இந்த பாடலை பாடுபவர்களை நலமுடன் வைத்துக்கொள்வார். அவர்களுடைய கர்ம வினைகளை தீர்ப்பார் இந்திரனே இழந்து செல்வத்தை திரும்ப பெறுவதற்கு இந்த பாடலை பாடினாராம் நாமும் வெள்ளிக்கிழமை இரவில் வரக்கூடிய சுக்கிர கோரையில் பாடும் பொழுது மகாலட்சுமி தயாரின் அருளால் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். இழந்த செல்வத்தையும் பெற முடியும் மகாலட்சுமி தேவியாருடைய அஷ்டகத்தை முழுமனதோடு படித்து மகாலட்சுமி தாயார் உடைய பரிபூரண அருளை பெற்று கர்ம வினைகளை போக்குங்கள்.
இதனையும் படியுங்கள் : செல்வத்தை அள்ளி தரும் மகாலட்சுமி மற்றும் குபேரன்


