தேய்பிறை அஷ்டமி அன்று செய்யக்கூடிய வழிபாடு!
குரு பார்க்க கோடி நன்மைகள் என்று ஒரு பழமொழி உள்ளது. குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி திதி வருவதால் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீரும் உதாரணமாக கடன் பிரச்சினைகள் வேலையில் பிரச்சனை பல பிரச்சனைகள் தீராத நோய் என அனைத்துமே சர
குரு பார்க்க கோடி நன்மைகள் என்று ஒரு பழமொழி உள்ளது. குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி திதி வருவதால் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீரும் உதாரணமாக கடன் பிரச்சினைகள் வேலையில் பிரச்சனை பல பிரச்சனைகள் தீராத நோய் என அனைத்துமே சரியாகும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கும் குடும்பத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருந்தாலும் காலபைரவரை வழிபாடு செய்துவர பிரச்சனைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் எனவே தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை நம்பிக்கையோடு வழிபாடு செய்தால் கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம்.
காலபைரவர்
மிகப்பெரிய கஷ்டங்களில் இருந்து வெளிவருவதற்கு நாளை தேய்பிறை அஷ்டமி திதி என்று காலபைரவருக்கு நடக்கக்கூடிய உச்சிகால பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். பூஜைகள் கலந்து கொண்டு பைரவருக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளை பார்க்க வேண்டும் மேலும் அந்த பூஜையில் கலந்து கொண்டு அனைவருக்கும் பிரசாதமாக தயிர் சாதம் கொடுப்பது நல்லது அப்படி செய்யும் போது கடன் பிரச்சினைகள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
உங்களுடைய ஜாதகத்தில் சூரிய பகவான் சரியில்லை என்றால் உங்களுடைய தொழில் வேலை ஆரோக்கியம் என அனைத்திலும் பிரச்சனைகள் ஏற்படும் அதனை சரி செய்ய தேய்பிறை அஷ்டமியில் உச்சிக்கால பூஜைகள் கால பைரவரை வழிபடுவது சிறப்பானது. பொதுவாக மாலை நேரத்தில் தான் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடக்கும். எனவே அந்த சமயத்தில் கோவிலுக்கு செல்லும்போது முந்திரியை மாலையாக கட்டி கால பைரவருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் வியாழக்கிழமை அன்று காலபைரவருக்கு முந்திரி மாலை சாற்றுவது நம்மை படப் பிரச்சினையில் இருந்து வெளிக்கொண்டுவரும்.
முந்திரி மாலை
உங்கள் வசதிக்கேற்ப 11, 21 என முந்திரி கை வைத்து மாலை கட்டலாம் தயிர்சாதத்தை நெய்வேத்தியமாக கால பைரவருக்கு படைத்து விட்டு அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். யாசகம் கேட்பவர்களுக்கு தானம் கொடுப்பதும் பல மடங்கு புண்ணியத்தை கொடுக்கும். தேய்பிறை அஷ்டமி என்றாலே நம் முன்னோர்கள் கூறியது போல மிளகு தீபம் பூசணிக்காய் தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களை கொடுக்கும் அந்த வகையில் உங்களால் முடிந்த அளவிற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். காலபைரவரை நாளைய தினத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்துமே நல்லதாகவே நடக்கும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : வளம் தரும் பைரவர் வழிபாடு