குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டிய வழிபாடு!!

அனைவருடைய குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமே இருக்காது. சிறு சிறு சண்டைகளும் அதற்கு பின்பு மகிழ்ச்சியும் இருந்தால் தான் வாழ்க்கையும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் எப்பொழுதுமே சண்டை மட்டுமே இருந்தால் வாழ்க்கையை வெறுத்து

By ·

அனைவருடைய குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமே இருக்காது. சிறு சிறு சண்டைகளும் அதற்கு பின்பு மகிழ்ச்சியும் இருந்தால் தான் வாழ்க்கையும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் எப்பொழுதுமே சண்டை மட்டுமே இருந்தால் வாழ்க்கையை வெறுத்துப் போய்விடும். அப்படி வாழ்க்கை வெறுத்துப் போகாமல் இருப்பதற்கு வீட்டில் இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள் சண்டை வராமல் இருக்க குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்ப ஏற்ற வேண்டிய மூன்று தீபங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சண்டை சச்சரவுகள் வர காரணம்

கூட்டுக் குடும்பத்தில் மட்டும் தான் பிரச்சனை வரும் என்று கிடையாது தனித்தனியாக பிரிந்து இருந்தாலும் கூட பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத இடத்தில் சண்டைகள் அதிகமாக இருக்கும். இருவரும் சரிசமமாக விட்டுக் கொடுக்க வேண்டும் ஒருவர் மட்டும் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக சுபிட்சம் கிடைக்காது. சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க தினமும் இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள்.

மூன்று எண்ணெய் தீபம்

இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் நெய் மூன்றையும் தனித்தனியாக மண் அகல் விளக்குகளில் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மேலும் இந்த இலுப்பை எண்ணெய் குலதெய்வத்திற்கு உகந்தது காவல் தெய்வங்களுக்கும் உகந்தது எனவே அவர்களுக்கு இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது சிறப்பானதாகும்.

நல்லெண்ணெய் தீபத்தின் சிறப்புகள்

பெரும் தெய்வங்களுக்கு உகந்த எண்ணெய் நல்லெண்ணெய் மருத்துவ செலவுகள் குறைந்து ஆரோக்கியம் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி நிலைக்க நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வரலாம். தினமும் பூஜை அறையில் நல்லெண்ணெய் வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாம்.

நெய் தீபம்

நெய் மகாலட்சுமி தேவியாருக்கு உகந்தது. நெய் கொண்டு தீபம் ஏற்றி வருபவர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி அடையும் செல்வம் அதிகரிக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக கலக்காமல் தனித்தனியாக அகல் விளக்குகளில் ஊற்றி பூஜை அறையில் தீபம் ஏற்றி வந்தால் குலதெய்வத்தின் அருளும் இஷ்ட தெய்வத்தின் உடைய அருளும் கிடைக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த தீபத்தை ஏற்றி வருவது நல்லது.

தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய் தீபம்

விநாயகருக்கு புதன்கிழமை தோறும் தேங்காய் எண்ணெய் வைத்து தீபம் ஏற்றி பாருங்கள். நிச்சயமாக கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். விநாயகருக்கு இந்த தீபத்தை ஏற்றி வர வீட்டில் உள்ள மன கசப்புகளும் நீங்கும் மேலும் அம்பாளுக்கு வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் அமைதி கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : வீட்டிற்கு வருபவர்களை இந்த இடத்தில் மட்டும் அமர விடக்கூடாது! கனவன் மனைவிக்குள் சண்டை வருமாம்!

Recipes AMP · Quick view
View full