வீட்டிற்கு வருபவர்களை இந்த இடத்தில் மட்டும் அமர விடக்கூடாது! கனவன் மனைவிக்குள் சண்டை வருமாம்!

- Advertisement -

நம் வீட்டிற்கு தெரியாதவர்கள் வந்தால் கூட முகத்தில் புன் முறுவலுடன் வரவேற்க வேண்டும் என்ற நமது தமிழர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி வருபவர்கள் நாம். ஆனால் இன்று நமக்கு தெரிந்த சொந்தக்காரர்கள், தெரிந்தவர் இவர்களை வீட்டிற்கு வந்தால் பயப்படும்படியாக உள்ளது. அப்படி நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை மறந்தும் கூட இந்த இடத்தில் மட்டும் அமர விடக்கூடாது என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றனர். அதையும் மீறி இந்த இடத்தில் நாம் அமர வைக்கும் போது நமது வீட்டில் பல குழம்பங்களும், பிரச்சனைகளும் வரும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் சண்டை வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வெறும் தரை

முதலில் நமது வீட்டிற்கு வரும் உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என யார் வந்தாலும் அவர்களை அன்புடன் வீட்டிற்குள் வரவேற்க வேண்டும். அப்படி வீட்டிற்குள் வரவேற்றவர்களை எக் காரணம் கொண்டும் வெறும் தரையில் அமரும் படி மட்டும் சொல்லக்கூடாத. ஏதாவது பாய் அல்லது சேர் எடுத்து போட்டு அதில் அவர்களை அமர சொல்ல வேண்டும். அதன் பின்பு வீட்டுக்கு வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் அல்லது மோர் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் இது தான் நம் சம்பிரதாயமும் கூட.

- Advertisement -

கெட்ட எண்ணங்கள்

ஏனென்றால் வீட்டுக்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வயிறை நாம் குளிர செய்து விட்டாலே போதும் அவர்கள் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் நடக்கும் என நமக்கு சாஸ்திரங்கள் ஐதீகம் கூறுகின்றனர். நம் வீட்டுக்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் ஒரு சிலர் நமது வீட்டை பார்க்கும் போது பொறாமை கண்ணுடனும் அல்லது வஞ்சக எண்ணங்களுடன் பார்க்கும் போதும் கூட நாம் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை மோர் கொடுக்கும் போது அந்த எண்ணங்களை நாம் கொடுக்கும் பானங்கள் தனித்து விடும்.

வீடை சுற்றி பார்ப்பார்கள்

இப்படி நான் வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் முதல் முதலாக நமது வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் நமது வீட்டை சுற்றி பார்க்க ஆசைப்படுவார்கள். அப்படி அவர்கள் நமது வீட்டை சுற்றி பார்க்கும் போது எல்லா இடங்களுக்கும் செல்வார்கள் அப்படி செல்லும்போது அவர்கள் உங்கள் வீட்டின் கனவன் மனைவியின் படுக்கையறைக்குள் செல்லாமல் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றாள் கணவன் மனைவி படுக்கும் அறையில் வீட்டிற்குள் வருபவர்களை அங்கு அமர வைக்க கூடாது.

கனவன் மனைவிக்குள் சண்டை வரும்

முன்பெல்லாம் நாம் படுப்பதற்கு பாய் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலங்களில் கணவன் மனைவி படுக்கும் பாயை கூட யார் கண்களில் படும்படி வைக்க மாட்டார்கள். அதை தினமும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி கழுவி காய வைத்து தான் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் கட்டில் மெத்தை என பயன்படுத்தி வருகிறார்கள் இருந்தாலும் நம் வீட்டிற்கு வரும் உறவினர்கள் விருந்தாளிகளை கணவன் மனைவி படுத்து உறங்கும் மெத்தையில உட்கார வைக்காதீர்கள் இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருமாம்.

-விளம்பரம்-

நோயாளிகள்

அதேபோல நமது வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் இருந்தாலும் நோய்வாய் பட்டு இருந்தாலும் அவர்களுக்கு என்ன தனியாக ஒரு அறை அல்லது இடம் ஒதுக்கி வைத்திருப்போம் அப்படி உடல் நலம் சரியில்லாதவர்கள் இருக்கும் இடத்திலும் யாரையும் அமர வைக்க கூடாது. குறிப்பாக குழந்தைகளை இது போன்ற இடங்களில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது ஏனென்றால் அவர்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் அதிகமாக உண்டு இது ஆன்மீக ரீதியாகவும் நல்லது கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.

தரித்திரம் பிடிக்கும்

ஆகையால் கணவன் மனைவி இருவரும் பயன்படுத்தும் படுக்கை அறையில் எப்பொழுதுமே யாரையும் அனுமதிக்காமல் முடிந்தளவிற்கு பூட்டி வைத்து பயன்படுத்துவது நல்லதாக இருக்கும். அதுபோல நீங்கள் படுத்து உறங்கும் மெத்தை தலையணைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து காய வைத்து எடுத்து பயன்படுத்த வேண்டும். சிலர் மாத கணக்கில் சுத்தம் செய்யாமல் பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள் இதனால் வீட்டிற்கு தரித்திரம் பிடித்து கொள்ளும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here