நேர்மறை ஆற்றல் அதிகரிக்க செய்ய வேண்டிய வழிபாடு!!
ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமாக வாழ வேண்டும் என்றால் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு நவகிரகங்களுடைய அருள் முழுவதுமாக வேண்டும். நவகிரகங்களுடைய ஆதிக்கம் நல்ல விதத்தில் இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் தீய விதத்தில் இருந்தால் எதிர்மற
ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமாக வாழ வேண்டும் என்றால் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு நவகிரகங்களுடைய அருள் முழுவதுமாக வேண்டும். நவகிரகங்களுடைய ஆதிக்கம் நல்ல விதத்தில் இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் தீய விதத்தில் இருந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே நவகிரகங்கள் நல்ல விதத்தில் அமைவதற்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்கள்
கிரகங்களில் மொத்தமாக ஒன்பது கிரகங்கள் உள்ளன. அனைத்துமே சாதகமான நிலையில் செயல்பட்டால் தொட்ட காரியங்களில் நாம் வெற்றி பெற முடியும் ஏதாவது ஒரு கிரகம் நமக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஜாதக ரீதியாக நவகிரகங்களை நம்பி நாம் எந்த அளவிற்கு செயல்பாடுகளை செய்கின்றோமோ அதே அளவிற்கு தான் வீட்டில் கொல்லும் நவகிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய நவக்கிரகங்களின் ஆதிக்கம் நல்ல விதமாக இருந்து வீட்டில் அனைத்து நன்மைகளும் கிடைப்பதற்கு இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பரிகாரத்தை செய்ய வேண்டிய இடம்
வீட்டிற்குள் நுழைவதற்கு காரணமாக இருக்கக்கூடிய நிலை வாசலில் தான் எந்த ஒரு பரிகாரத்தையும் செய்ய வேண்டும். அதிலும் நவகிரகங்களின் அருளை பெறுவதற்கு நிச்சயமாக நிலை வாசலில் இந்த பரிகாரத்தை செய்தால் நல்லது நடக்கும். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ராகு காலம் எமகண்டம் கரிநாள் போன்ற நாட்களை தவிர்த்து அமாவாசை பௌர்ணமி போன்ற அனைத்து நாட்களிலும் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
பரிகாரம் செய்வதற்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்வது போலவே நிலை வாசலையும் பன்னீர் வைத்து சுத்தம் செய்து நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு ஒரு மஞ்சள் நிறத் துணியை எடுத்து நவகிரகங்களுடைய அருளை பெற்ற நவதானியங்களை அதில் சேர்த்து நிலை வாசலில் கட்ட வேண்டும். தினமும் நாம் சாமி கும்பிடும் போது நிலை வாசலில் உள்ள அந்த நவதானிய முடிச்சுக்கும் ஊதுபத்தி சாம்பிராணி காட்டி வழிபாடு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த முடிச்சை மாற்ற வேண்டும் பழைய நவதானியங்களை ஓடும் தண்ணீரில் சேர்க்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து நவகிரகங்களுடைய அருளை பெற்று வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : கஷ்டத்தை தீர்க்கக்கூடிய பச்சை கற்பூர பரிகாரம்!!