கஷ்டத்தை தீர்க்கக்கூடிய பச்சை கற்பூர பரிகாரம்!!

- Advertisement -

வாழ்க்கையில் ஒரு சிலர் மிகவும் வறுமையில் கஷ்டத்தில் இருப்பார்கள் நான் படாத கஷ்டமே இல்லை கஷ்டம் மட்டுமே வாழ்க்கை என்று நிறைய பேர் சிரமத்தில் இருப்பார்கள். அப்படி சிரமத்தில் இருப்பவர்களுக்கு பெரிய ஆன்மீகம் சார்ந்த எளிமையான பரிகாரங்கள் உள்ளது அதை அவர்கள் செய்து பார்க்கலாம். அந்த வகையில் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள், காரிய தடைகள், பணக்கஷ்டங்கள், கணவன் மனைவிக்குள் சண்டை என பல பிரச்சனை இருப்பவர்கள் பச்சை கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக அனைத்தும் தீர்ந்து விடும். அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவு பார்க்கலாம்.

-விளம்பரம்-

பச்சைக் கற்பூர பரிகாரம்

நிறைய பிரச்சினைகள் வீட்டில் வருவதற்கு வீட்டில் கெட்ட சக்தி இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இரவு நேரத்தில் தூக்கமே இல்லை நிம்மதியே இல்லை என்று மன வருத்தத்தில் இருப்பவர்கள் இந்த பச்சை கற்பூர பரிகாரத்தை செய்து பாருங்கள். அதற்கு நமக்கு செம்பாலான சொம்பு அல்லது பித்தளை சொம்பு தேவைப்படும். அந்த சொம்பு நிறைய தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு மூன்று பச்சை கற்பூர துண்டுகளை போட்டு மஞ்சள் பொடியையும் போட்டு கலந்து இரவு அந்த தண்ணீரை அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள் காலை எழுந்து அந்த தண்ணீரை கொண்டு வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இதனை செய்து வந்தால் வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளும் மறைந்து வீட்டில் எதிர்மறையான விஷயங்கள் நடக்கும்.

- Advertisement -

பரிகாரத்தின் பலன்கள்

கணவன் மனைவிக்குள் ஏதேனும் சண்டை வந்தால் கூட இந்த பச்சை கற்பூரத்தை தூள் செய்து அறையில் இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்க வேண்டும். இந்த பச்சைக் கற்பூரத்தில் இருந்து வரக்கூடிய வாசனை மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். இந்த பச்சை கற்பூரத்தை வைத்து இதனையும் கூட நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் வெளியே செல்லும்போது காரியத்தடை ஏற்பட்டால் பச்சை கற்பூரத்தை நசுக்கி அதனை குங்குமம் அல்லது விபூதியோடு கலந்து நெற்றியில் பூசிக்கொண்டு முக்கியமான காரியங்களுக்கு செல்லலாம். மேலும் இந்த பச்சை கற்பூரத்தை விபூதியோடு கலந்து உடம்பிலும் தடவிக் கொண்டு செல்லலாம். இப்படி சென்றால் நிச்சயாமாக காரிய தடை ஏற்படாமல் இருக்கும்.

பணக்கஷ்டத்திற்கு பரிகாரம்

மேலும் வீட்டு கடன் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது என்றால் ஒரு பச்சை நிற துணியில் இரண்டு ஏலக்காய் இரண்டு துண்டு வெட்டி இரண்டு பச்சை கற்பூரம் சேர்த்து முடிச்சாக கட்டி பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைக்கலாம். இது நிச்சயமாக நல்ல பலனை கொடுக்கும். எனவே முழுநம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : கடனை முழுமையாக அடைக்கும் கோ பரிகாரம்

-விளம்பரம்-