வீட்டிலயே அல்வா சாப்பிட நினைத்தால் ருசியான மஞ்சள் பூசணி அல்வா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் மிகவும் வித்தியாசமான ஸ்வீட்களை ருசிக்கவே பலரும் விரும்புவர். பூசணிக்காய் பயன்படுத்தி பூசணிக்காய் கூட்டு, பூசணிக்காய் குழம்பு, என்று பல வகையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்
இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் மிகவும் வித்தியாசமான ஸ்வீட்களை ருசிக்கவே பலரும் விரும்புவர். பூசணிக்காய் பயன்படுத்தி பூசணிக்காய் கூட்டு, பூசணிக்காய் குழம்பு, என்று பல வகையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று காண உள்ளோம். இது செய்வது மிகவும் சுலபம் 25 முதல் 30 நிமிடங்களில் செய்யலாம். இந்தியாவில் பல விதமான அல்வா செய்யப்படுகிறது. பாதாம் அல்வா, முந்திரி அல்வா, கேரட் அல்வா, வட இந்தியாவில் மிகவும் பிரபலம். தமிழகத்தில் அனைவரும் அறிந்தது திருநெல்வேலி அல்வா. இதுதவிர மஞ்சள் பூசணிக்காய் அல்வா திருமணம் போன்ற விசேஷங்களில் செய்யப்படும்.
அரசாணிக்காய், மஞ்சள் பூசணிக்காய், பரங்கிக்காய் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூசணிக்காயில் நிறையவே சத்துக்கள் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கும். பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். இந்த பூசணிக்காயை இப்படி அல்வா செஞ்சி பாருங்க, ஆரோக்கியம் மட்டுமல்ல அட்டகாசமான சுவையையும் கொடுக்கும். பூசணிக்காயை நாம் எப்பொழுதும் குழம்பு அல்லது கூட்டாக செய்து தான் சாப்பிட்டிருப்போம் ஆனால் பூசணிக்காயில் அல்வா செய்யலாம் என்று எத்தனை பேருக்கு தெரியும், அந்த வகையில் இந்த தொகுப்பில் பூசணிக்காயில் அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் ஒரு தரம் பூசணிக்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க! சாதத்துடன் சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்!