மீன ராசியில் அமரும் சுக்கிர பகவான் இனி இந்த மூன்று ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!
ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், காதல், கலை, சுகபோகம் மற்றும் வசதியின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை அல்லது நட்சத்திரத்தை மாறும் போது அதன் விளைவு அன
ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், காதல், கலை, சுகபோகம் மற்றும் வசதியின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை அல்லது நட்சத்திரத்தை மாறும் போது அதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். அந்த வகையில் அசுரர்களின் குருவான சுக்கிர பகவான், உச்ச ராசியான மீனத்தில் நுழைகிறார். இது ஒருபுறம் மாளவ்ய மற்றும் மறுபுறம் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மார்ச் 01 நள்ளிரவு 01.01 மணிக்கு சுக்கிர பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மார்ச் 2 முதல் 26 வரை இதன் தாக்கம் இருக்கும். இதன் காரணமாக 3 ராசிகளுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கப்போகிறது. யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் மிகவும் நன்மை தரும். இந்த காலக்கட்டத்தில் வருமனத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். செல்வம் பெருகும், நிதி நிலைமை வலுப்பெறும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களும் நல்ல லாபத்தைக் காண்பார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, திரிகோண ராஜயோகம் பல பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும். வலுவான நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு புதிய வழிகள் திறக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் மற்றும் நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த ராஜயோகம் வாழ்வில் பல நேர்மறை மாற்றங்களைக் கொண்டுவரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல லாபத்தை காண்பார்கள். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சி பலன்கள் 2026!!