ஜோதிடத்தின்படி, புத்திசாலித்தனம், தர்க்கம், பேச்சுத்திறன், பகுத்தறிவு, கல்வி மற்றும் தகவல் தொடர்பு திறமைகளை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக புதன் கிரகம் பார்க்கப்படுகிறது. கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன் கிரகத்தின் ஒவ்வொரு அசைவும், வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி 13 ஆம் நாள் கும்ப ராசியில் நிகழும் இந்த மாற்றம் ஆனது அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வருகிறது. ஆகையால் புதனின் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பலன்களை பெற போகிறார்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

மேஷ ராசியினருக்கு உண்மையில் இந்த காலம் முன்னேற்றத்திற்கான ஒரு காலமாக பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் உறவுகளுடன் காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். தொழில் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த திருப்பங்களை கொண்டு வரும். சுயமாக தொழில் செய்து வருவோருக்கு மட்டும் அல்ல, அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்களுக்கும் எதிர்பார்த்த வெற்றிகளை கொண்டு வருகிறார். சிறிய அளவில் பயணங்கள் ஏற்படும். வழக்குகளால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்

ரிஷப ராசி கொண்டவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் இந்த புதன் எழுச்சி, அவர்களின் தொழில் வாழ்க்கையில் சாதனைகள் பல செய்ய அனுமதிக்கிறது. ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வுக்கும் வழி பிறக்கும். தங்கள் தொழில் துறையில் உயர் பதவிகள் மற்றும் உச்ச நிலையை அடையும் வாய்ப்பினை பெறுவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். காதல் முயற்சிகள் கைகூடும்.
மிதுனம்

புதனை ஆளும் கிரகமாக கொண்ட மிதுன ராசியினருக்கு, இந்த புதன் கிரகத்தின் எழுச்சி நிலை பல்துறை வெற்றிகளை கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்கள் தேர்வில் வெற்றி காண்பார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும்.
கடகம்

கடக ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 8-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த புதன் பெயர்ச்சி, அவர்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் எதிர்மறையான பலன்களை கொண்டு வருகிறது. மற்றவர்களுடன் பேசுகையில் கனிவான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். வரும் நாட்கள் வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். ஆனால் எடுக்கும் முடிவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்

ஆளுமை, அதிகாரத்திற்கு பெயர் பெற்ற ராசிகளில் ஒன்றான சிம்ம ராசியினருக்கு இந்த புதன் கிரகத்தின் நிலை மாற்றம், சவால்கள் நிறைந்த காலத்தை கொண்டு வருகிறது. பணிகளில் எதிர்பார்த்த வெற்றியை நீங்கள் கொண்டு வரலாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் ஆதரவுடன் இந்த சவால்களை சமாளிப்பீர்கள். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் உற்சாகத்துடன் செயல்படும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் சிறு மனஸ்தாபங்கள், மன கஷ்டங்கள் வந்துச் செல்லக்கூடும். உங்கள் பணிகளை உரிய காலத்தில் செய்து முடிப்பீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், ஆனால் பணத்தை சிறப்பாகப் பயன்படுத்த சேமிப்பதிலும் திட்டமிடுவதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய தொடக்கத்திற்கான ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. மண வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள், மனஸ்தாபங்களுக்கு தீர்வு காண்பீர்கள். தொழில் வாழ்க்கையில் புதிய கூட்டணி அமைக்க முடியும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு சிறு சிறு பிரச்னைகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தனது வீட்டில் இருக்கும் நபர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கும் அளியுங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தாயின் உடல்நிலை குறித்து கொஞ்சம் கவனமாக இருங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும். தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க முயற்சி செய்யவும்.
தனுசு

தனுசு ராசி கொண்டவர்களின் திறமைக்கான அங்கீகாரம் மற்றும் வெகுமதி கிடைக்கும் ஒரு சிறப்பு காலமாக இது பார்க்கப்படுகிறது. உங்கள் நிதி நிலை சிறப்பாக மாறும். பழைய கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளுக்கு பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் தங்கள் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். குறுகிய பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உணவு பழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான ஒரு காலத்தை கொண்டு வரும் இந்த புதன் எழுச்சி, அதிர்ஷ்டத்தால் நற்பலன்கள் பல கொண்டு வருகிறது. காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பம் நிகழும். நிதி நெருக்கடி குறையும், முன்னர் செய்த முதலீடுகள் போதுமான லாபத்தை கொண்டு வரும். தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன், நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணியிடத்தில் உங்கள் புத்திசாலித்தனமும் திறமையும் பாராட்டப்படும்.
கும்பம்

கும்ப ராசியில் நிகழும் இந்த புதன் எழுச்சி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருகிறது. பணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வரும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்கள் முன்னேறும்போது புதிய அடையாளத்தைப் பெறுவார்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் 12-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த புதன் எழுச்சி நிலை, திடீர் செலவுகளை அதிகரிக்கிறது. தொழில் சார்ந்த முதலீடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளுக்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன. உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும்.
இதனையும் படியுங்கள் : 2026ல் சனியின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு யோகம் தான்!!


