புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கபடுகிறார். அனைத்து கிரகங்களிலும் அவர் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு நீதியின் கடவுளான சனிபகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டு
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கபடுகிறார். அனைத்து கிரகங்களிலும் அவர் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு நீதியின் கடவுளான சனிபகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 25 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். 2025ல் சனியின் மாற்றம் பலருக்கு நல்ல காலமாக இருக்கும். ஆனால் சிலருக்கு சவால்களைக் கொண்டு வரலாம். சனி பகவானின் பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி மாறுகிறார். பாத சனியாக அடுத்த இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்க உள்ளார். ஏழரை சனி முடியாத சூழல் இருப்பதால் எந்த வேலையிலும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்காலத்தில் நீங்கள் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார நிலை சற்று மோசமாகும். கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
கும்பம்
கும்ப ராசிக்கு தற்போது ராசியிலேயே சனி சஞ்சரிக்கும் ஜென்ம சனி தொடங்கியுள்ளது. ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்கும். பண வரவு இருந்தாலும் அதை சேமிக்க முடியாத சூழல் இருக்கும். ஆன்மீகத்தின் தாக்கம் உங்களுக்கு கட்டாயம் இருக்கும். சிக்கல்கள் தேடி வந்தாலும் நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. பல்வேறு விதமான சவால்கள் உங்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கக்கூடும். குடும்பத்தில் சிறிய அளவில் சண்டை சச்சர்வுகள் இருக்கும். நேர்மறை மனநிலை கொண்ட நபர்களுடன் பழகுவது அவசியம்.
மீனம்
மீன ராசியினருக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. விரய சனி நடக்கும் காலம் என்பதால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். நிறைய சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கடினமான காலமாக இது உங்களுக்கு இருக்கும். ஆன்மீகத்தில் நீங்கள் அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உறவினர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். பல இடங்களில் உங்களுடைய பொறுமைகள் சோதிக்கப்படும்.
இதனையும் படியுங்கள் : புதனின் பெயர்ச்சியால் புத்தாண்டு தொடக்கத்திலேயே இந்த 3 ராசிகளுக்கு பம்பர் பலன்கள் தான்!!