மீனத்தில் இணையும் சனி மற்றும் ராகுவால் பிசாச யோகத்தால் நிதி இழப்பை சந்திக்கப் போகும் 5 ராசிகள்!!

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கக் கூடியவர் சனி பகவான் என்பது அனைவரும் அறிந்ததே. மீனத்தில் இருக்கும் ராகு பகவான் மே 14ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை சனி மற்றும் ராகு மீனத்தில் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளனர். இதனால் சனிப

By ·

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கக் கூடியவர் சனி பகவான் என்பது அனைவரும் அறிந்ததே. மீனத்தில் இருக்கும் ராகு பகவான் மே 14ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை சனி மற்றும் ராகு மீனத்தில் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளனர். இதனால் சனிபகவான் மடக்குழப்பத்தை தரக்கூடிய ராகுவுடன் சேர போவதால் பிசாச யோகம் என்ற அசுப யோகம் உருவாகப் போகிறது. இதனால் ஐந்து ராசிகளுக்கு மிகவும் பெரிய இழப்பு ஏற்படப்போகிறது அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இது சற்று கடினமான காலமாகத்தான் இருக்கும் பனையிழப்பு ஏற்பட்டு பொருளாதார நிலை பாதிக்கப்படும். பணம் காரணமாக அதிக அளவில் பயணம் செய்ய நேரிடும். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீட்டையும் தவிர்க்கவும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் வேண்டும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் யோசிக்காமல் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டு செலவுகள் அதிகரிக்கலாம் எனவே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். பொருளாதார நிலை சீராக இருக்க வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். கடினமாக உழைத்தாலும் வெற்றியை அடைவது கடினமாக இருக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். கடன் தொல்லை அதிகரிக்கும். பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். காதல் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லை எனில் உறவு முறிந்தாலும் முறியலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும் தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் இந்த காலகட்டம் சவாலானதாக இருக்கும். சனியின் தாக்கம் காரணமாக குழப்பமான சூழலில் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் குடும்ப அமைதியை பாதிக்கும். உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்களுடைய பேச்சை கட்டுப்படுத்துங்கள் இல்லை எனில் நெருங்கிய நபர்கள் உங்களிடம் இருந்து விலகிச் செல்ல நேரிடும்.

மீன ராசி

மீன ராசிக்காரர்கள் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறிப்பாக முழங்கால் வலியால் பாதிப்பு ஏற்படும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலையை தொடங்குவதை தவிர்க்கவும் இந்த நேரத்தில் உங்களுடைய முக்கியமான வேலைகள் தடைபடலாம்.

இதனையும் படியுங்கள் : குரு வக்ர பெயர்ச்சி 2025 பலன்கள்

Recipes AMP · Quick view
View full