குடும்ப சண்டை தீர்ந்து போவதற்கு வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்!!

அனைவருடைய வீட்டிலும் கணவன் மனைவி குழந்தைகள் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் என யாருடன் ஆவது சண்டைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இப்படி இருக்கக்கூடிய குடும்பத்தில் யாராவது ஒருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கும். சந்தோஷம் இல

By ·

அனைவருடைய வீட்டிலும் கணவன் மனைவி குழந்தைகள் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் என யாருடன் ஆவது சண்டைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இப்படி இருக்கக்கூடிய குடும்பத்தில் யாராவது ஒருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கும். சந்தோஷம் இல்லாத வீட்டில் சந்தோஷம் அதிகரிப்பதற்கு பிரச்சனைகள் தீர்ந்து அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது அந்த வழிபாட்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உறவினர்களுடன் சண்டை

குடும்பத்தில் சண்டை என்றால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது மாமனார் மாமியார் மருமகள் மருமகன் போன்றவர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். இப்படி பல உறவுகளுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒரு சில நேரத்திலேயே சரியாகி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பி விட்டால் அது வீட்டிற்கு நிம்மதியை கொடுக்கும். அதை தவிர்த்து எப்பொழுதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டைகள் வந்து கொண்டே இருந்தால் அதிலும் கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வந்து கொண்டே இருந்தால் பிரியும் சூழல் கூட உருவாகும்.

தீபம் ஏற்றும் முறை

ஒரே ஒரு தீபத்தை ஏற்றுவதால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நாம் எந்த எண்ணையை வீட்டில் தினமும் பயன்படுத்துகிறோமோ அதனையே பயன்படுத்திக் கொள்ளலாம். புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அருகில் உள்ள முருகன் சன்னதிக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கருவறையில் எரிந்து கொண்டிருக்கும்‌. தீபத்தில் உள்ள திரியை குருக்களிடம் கேட்டு வாங்கி அதிலிருந்து சிறிதளவு திரியை எடுத்து கொண்டு வர வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் ஏற்கனவே நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அந்த பழைய திரியுடன் புதிதாக ஒரு பஞ்சு திரியை போட்டு காலையிலேயே ஒரு தீபத்தை ஏற்றி வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து சண்டை சச்சரவுகளும் நீங்கும். ஒற்றுமை அதிகரிக்கும் அன்றைய நாள் முழுவதும் அந்த தீபம் எரிய வேண்டும் இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முருகன் கோவிலுக்கு சென்று எரிந்த திரியை வாங்கி வந்து வீட்டில் தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் உள்ள மனக்கசப்புகள் நீங்கும். சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரிக்கும் எளிமையான இந்த வழிபாட்டை முருகப்பெருமானை நினைத்து ஏற்றி வந்தால் நிச்சயமாக முருகப்பெருமானுடைய அருளால் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.

இதனையும் படியுங்கள் : குலதெய்வத்தின் சாபம் நீங்கி அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபம்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை