ஆடி கடைசி வெள்ளியில் அம்பாளுக்காக செய்ய வேண்டியவை

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் தான் இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளையும் அம்பாள் ஏற்றுக்கொண்டு நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் அருள் நிறைந்த மாதமான ஆடி மாதம் என்பதால் இந்த மாதத்தில் நம்முடைய பிரச்சனைகளை கூறி வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையு

By Ramya · 15/8/2024

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் தான் இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளையும் அம்பாள் ஏற்றுக்கொண்டு நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் அருள் நிறைந்த மாதமான ஆடி மாதம் என்பதால் இந்த மாதத்தில் நம்முடைய பிரச்சனைகளை கூறி வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் செய்தால் அம்மன் அதற்கான பலனை நமக்கு பல மடங்கு தருவாள்.

ஆடி கடைசி வெள்ளி

ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்த வெள்ளிக்கிழமை. இந்த வருடம் ஆடி மாதத்தில் மொத்தம் ஐந்து வெள்ளிக்கிழமைகள் இருந்தது முதல் நான்கு வார வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் எந்த வழிபாட்டையும் செய்ய தவறி இருந்தால் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அம்மனை எளிமையாக வழிபட்டால் கூட உங்களுக்கு பல மடங்கு பலன்களை அள்ளித் தருவாள் நீங்கள் மனம் உருகி செய்யும் பிரார்த்தனை உங்கள் தலையெழுத்தை மாற்றி துன்பங்களை போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும்

ஆடி வெள்ளியின் சிறப்புகள்

இந்த வருடம் ஆடி மாதத்தின் கடைசி நாள் வரலட்சுமி விரதத்துடன் கடைசி வெள்ளிக்கிழமைகளில் முடிகிறது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 16ஆம் தேதி வருகிறது இந்த நாள் அன்று வரலட்சுமி விரதம் இருப்பது மிகவும் நல்லது ஆனால் இந்த நாளன்று நாம் எளிய வழிபாட்டை செய்தால் கூட கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும் அதுமட்டுமில்லாமல் இந்த நாள் என்று மனம் உருகி நாம் என்ன வேண்டினாலும் அம்பாள் கொடுப்பார்

வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டிய நபர்கள்

திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லை திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது திறமை இருந்தும் நல்ல வேலை இல்லை கடன் பிரச்சினை குடும்பத்தில் பிரச்சனை மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்று அம்மனை முழு மனதோடு வேண்டிக் கொண்டால் துன்பங்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து போகும்

ஆடி கடைசி வெள்ளி வழிபாட்டு முறை

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையில் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ள அம்மனின் படத்திற்கு முன்னால் விளக்கேற்றி வைத்து நெய்வேதியமாக சர்க்கரைப் பொங்கலை படைத்து மனதார உங்களுடைய பிரச்சனைகளை சொல்லி அம்பாளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்கு அன்னதானத்திற்கு பணம் கொடுத்து அன்னதானம் கொடுக்கலாம் அன்னதானம் கொடுக்கும் அளவிற்கு பணம் இல்லை என்பவர்கள் அம்மனுக்கு நெய்வேதியமாக படைத்த சர்க்கரை பொங்கலை உங்கள் கைகளால் அருகில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

வேண்டும் வரத்தை தரும் வழிபாடு

மேற்கூறிய எந்த வழிபாட்டையும் செய்ய முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று கோவிலில் உள்ள உளவாரப்பணிகளை செய்யலாம். கோவிலில் கூட்டி பெருக்குவது அன்னதானம் நடந்து முடிந்த பிறகு அங்கு உள்ள இலைகளை எடுப்பது சுத்தம் செய்வது போன்று பணிகளை செய்யலாம் இது சரீரத்தால் அம்பாளுக்கு செய்யக்கூடிய ஒரு தொண்டு.பொருளாக செய்கின்ற தொண்டை விட சரீரத்தால் முழு மனதோடு செய்கின்ற தொண்டு அம்பாளிடம் நமக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் உடல் ரீதியான பணிகளை செய்ய முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் அன்னதானத்திற்கு தண்ணீர் வாங்கி கொடுக்கலாம்.

அம்மனிடம் முறையிட்டால் தீரக்கூடிய பிரச்சனைகள்

கடைசி ஆடி வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் மறுபடியும் வீட்டில் விளக்கேற்றி அம்பாளிடம் மனம் விட்டு உங்களுடைய குறைகளை சொல்லி முறையிடலாம ” நீயே கதி உன்னை தவிர என்னைக் காப்பதற்கு யாரும் இல்லை” என முழுவதுமாக அம்பாளிடம் சரணடைந்து உங்கள் பிரச்சனைகளை கூறலாம். மனம் உருகி வேண்டும் பொழுது நம் கண்களில் இருந்து வெளியேறக் கூடிய கண்ணீருக்கு மனம் இறங்கி அம்மன் உடனடியாக நமக்கு தேவையான மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுப்பாள்.அதனால் மனம் உருகி அம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

Recipes AMP · Quick view
View full