ருசியான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் ஆலு சாட் இப்படி செய்து பாருங்க!

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். சாட்டில் ஆலு சாட், சென்னா சாட், சமோசா சாட், கச்சோரி சாட், பேல் பூரி, தஹி பூரி என்று ப

By Prem Kumar · 4/4/2024

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். சாட்டில் ஆலு சாட், சென்னா சாட், சமோசா சாட், கச்சோரி சாட், பேல் பூரி, தஹி பூரி என்று பல விதங்களில் செய்யலாம். எந்த சாட் ஆனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர்.

சாட் வகையில் ஒன்றான ஆலு சாட் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். வழக்கமாக சாட் போன்ற உணவுகளை வெளியில் வாங்கி தான் சுவைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் அதனை வீட்டில் செய்வதால் அதிகமாக செய்து சாப்பிடலாம். ஆலு சாட் ரெசிபி டெல்லியில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் ஆகும். சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சு ஊற வைத்து விடும். அதிலும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்வது இதன் டேஸ்ட்டை மேலும் மேலும் சுவையூட்டுகின்றன.

மாலை வேளையில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது உருளைக்கிழங்கை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த ஆலு சாட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! இந்த ஆலு சாட் ரெசிபியை சீக்கிரமாக செய்வதோடு நமது பசிக்கும் மிகச் சிறந்த உணவாகும். மிகவும் மொறு மொறுப்பான நொறுங்கும் தன்மையுடன், ரொம்ப மிருதுவாக உள்ள உருளைக்கிழங்கை தட்டில் வைத்து இதனுடன் காரசாரமான மசாலா தூவி, இலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலே போதும் உங்கள் வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தாகவே மாறிவிடும். இந்த ரெசிபியை கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இதனையும் படியுங்கள் : சுவையான தஹி பப்டி சாட் இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full